”ஏற்றப்படும் அடிமை மகுடங்கள் – சங்பரிவாரின் சதிவரலாறு – ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்” நூல்கள் வெளியீட்டுவிழா !
தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம், சங்பரிவாரின் சதிவரலாறு மற்றும் தோழர் ஓவியா எழுதிய, ஏற்றப்படும் அடிமை மகுடங்கள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா, அக்டோபர் – 27 ஞாயிற்றுக்கிழமை மாலை, திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள ரவி சிற்றரங்க (Ravi mini Hall -Susi Hall) த்தில் நடைபெறவிருக்கிறது.
நன்செய் பதிப்பகம் பதிப்பித்துள்ள இம்மூன்று நூல்களையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி வெளியிட்டுச் சிறப்புரைரையாற்றுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் – 192 + 4 பக்கங்கள்; சங்பரிவாரின் சதி வரலாறு – 256 + 4 பக்கங்கள்; ஏற்றப்படும் அடிமை மகுடங்கள் – 96 + 4 பக்கங்கள் ஆக மொத்தம் 556 பக்கங்களைக் கொண்ட இம்மூன்று நூல்களும் வெறும் 150 ரூபாய்க்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
”ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் வரலாறு, ஒட்டு மொத்த இந்தியாவும் விடுலைக்காக போராடிக் கொண்டிருந்தபோது அவர்களது செயல்பாடு என்னவாக இருந்தது? அந்த அமைப்பின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது?
காந்தியின் கொலை வழக்கில் அவர்களின் பங்கு, வரலாறு முழுக்கவே முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் என ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய இந்நூல் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களால் எழுதப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு அறியாத பல செய்திகளைத் தரும் நூல் இது.” என்பதாக நன்செய் பதிப்பகத்தின் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைய காலத்திற்கு அவசியமான கருத்துக்களை தாங்கி வரும் இம்மூன்று நூல்களும் பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற நோக்கில், மக்கள் பதிப்பாக மலிவு விலையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.