விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் !
ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது தலா ரூ.1 இலட்சம் வீதம், ரூ.10000/- மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.
இதுதவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோருக்கும் முதலமைச்சர் மாநில விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10000/- மிகாமல் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது பெறுவதற்கு முந்தைய மூன்று வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான காலம் (01.04.2019 முதல் 31.03.2022 வரை) மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான காலம் (01.04.2020 முதல் 31.03.2023 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் (ளுயுயுசுஊ), அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உரைமேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2024.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.