சவுதிக்கு வேலைக்கு போன இடத்தில் மரணித்த ஐயப்பன்! மனிதநேயத்தோடு உடலை ஒப்படைத்த தமுமுக- மனிதநேய மக்கள் கட்சியினர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி 37 வயதான ஐயப்பன். குடும்ப சூழல் காரணமாக, சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடல்கடந்து சென்ற இடத்தில், எதிர்பாராத விதமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐயப்பன் இறந்துவிட்டார் என்ற செய்தி, கடன்பட்டு வெளிநாடு அனுப்பி வைத்த அவரது குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்திறங்கியது.

இறந்துபோன ஐயப்பனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்வதற்கான, சட்டரீதியா வழிமுறைகளோ அதைவிட பொருளாதாரமோ இடமளிக்காத நிலையில் நிர்கதிக்கு ஆளாகியிருந்தது, அவரது குடும்பம்.

உலக சக்கரை நோய் தினம்

பிழைக்கப்போன இடத்தில் ஐயப்பன் இறந்துவிட்டதும்; அவரது குடும்பம் வழி தெரியாமல் தடுமாறி நிற்பதையும் நண்பர்கள் வழியே அறிந்த தமுமுகவினர் ரியாத்தில் உள்ள மண்டல நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டனர். ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளான நூர் மற்றும் ஜாகிர் ஆகியோர் முன்னின்று, சவுதி அரேபிய சட்ட வழிமுறைகளை விரைந்து முடித்து உடனடியாக விமானம் வழியே, திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக, இதுபோன்ற நேர்வுகளில் சட்ட வழிமுறைகளை முடித்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, ஒரு மாதம்கூட ஆகிவிடும் நிலையில், மிகுந்த சிரத்தையெடுத்து பத்து நாட்களுக்கும் குறைவான நாட்களில் அனுப்பி வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், ஐயப்பனின் உடலை திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக, மமக திருச்சி (கி) மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி,மாவட்ட இளைஞரணி முஜிபுர் ரஹ்மான், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முகமது ரபிக், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், சமஸ்கிரான் கிளை செயலாளர் ரம்ஜான், ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஐயப்பனின் உறவினர்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி, அவர்களும் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கே ஒப்படைக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஏற்பாடு செய்து ஐயப்பனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

மாற்று மதத்தை சேர்ந்த நபராக இருந்தபோதிலும், மனித நேயத்தோடு மறைந்த தொழிலாளி ஐயப்பனை நல்லடக்கம் செய்வதற்காக மனமுவந்து மெனக்கெட்டிருக்கிறார்கள், தமுமுகவினரும் மனிதநேய மக்கள் கட்சியினரும்.

“இதுபோல,எங்களது கவனத்திற்கு வரும் எந்த ஒரு சிக்கலையும், சாதி மதம் பிரிவினை பேதம் இன்றி மனிதாபிமான அடிப்படையிலான பணிகளை எமது மார்க்க நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.” என்கிறார், தமுமுக திருச்சி மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா.

 

–    இளங்கதிர்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.