தேனி மாவட்டம் – முறைகேடாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
தேனி மாவட்டத்தில் கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் துணையோடு பல்வேறு இடங்களில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சீப்பாலக்கோட்டை கிராமத்தில் அனுமதி பெற்ற இடத்தில் கனிம வளங்களை வெட்டி எடுக்காமல் அனுமதி இல்லாத இடத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுக்க இரண்டாவது முறையாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
சின்னமனூர் முத்தையா மகன் கூடலிங்கம் என்பவர் சர்வே எண் 34/1B2, 34/1A2. , இரண்டு இடங்களில் கனிம வளங்களை வெட்டி எடுக்க தேனி மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத் தலையிடம் அனுமதி பெற்றார்.
சிப்பாலக்கோட்டை கிராமத்தில் அனுமதி பெற்ற இரண்டு இடங்களிலும் கனிம வளங்களை வெட்டி எடுக்காமல் அனுமதி இல்லாத சர்வே எண் 31/6 என்ற இடத்தில் தொடர்ந்து கனிம வளங்களை வெட்டி எடுத்து வந்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சானியா ஆய்வு நடத்தி முறைகேடாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதை கடந்த 29.9.2024 ஆம் தேதி தடை விதித்தார்.
மீண்டும் கடந்த மூன்று நாட்களாக அனுமதி பெறாத இடத்தில் கனிம வளங்களை மீண்டும் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டதை தகவல் அறிந்து மீண்டும் 12. 11 .2024 ஆம் ஆண்டு கனிம வளங்களை வெட்டி எடுப்பதை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சீரமைப்பு செய்வதற்காக என்று அனுமதி வாங்கிவிட்டு தொடர்ந்து கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்து முறைகேடாக கடத்தப்படுகிறது.
— ஜெய்ஸ்ரீராம்.