பல ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி அல்லல்படும் இனாம்மணியாச்சி பொதுமக்கள் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் வடக்கு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக சாலை வசதி இல்லை என்பதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், மக்கள் அந்த சாலைகளில் பயணிக்க முடியாத நிலை மட்டுமின்றி, வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை இருக்கிறது.
குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் குழாய்கள் வெறும் காட்சி பொருளாக இருப்பதாகவும், காசு கொடுத்துதான் குடிநீர் வாங்கி வருவதாகவும், மழை பெய்தால் குடிநீர் விநியோகம் செய்யும் வாகனம் உள்ளே வர முடியாது என்பதால் அந்த குடிநீர் கூட கிடைக்காது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பல ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியும் நடவடிக்கை இல்லை என்றால் சாலைக்கு வந்து போராடுவதை தவிர வேறு வழி என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
பேட்டி :
1.செல்வி
2.லெட்சுமி
3.செண்பகவல்லி
— மணிபாரதி.