அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளிக் கல்வி முறையைச் சிதைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும்! பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்

1

திருச்சியில் அடகு நகையை விற்க

பள்ளி விழா / நிகழ்வு நடத்த உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தொிவித்துள்ளது.

பள்ளியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக, பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்,  பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தின் பெரும் போராட்டத்தின் விளைவாக, கர்மவீரர் காமராசர் ஆட்சிக் காலம் முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி முறைமையைச் சிதைக்கும் மிகப்பெரும் முயற்சியின் தொடக்கமாக  அமையும் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பள்ளி கல்வித்துறைடிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை நாடு அனுசரிக்க உள்ளது.  அண்ணல் அம்பேத்கர் அவர்கள் டிசம்பர் 17, 1946 அன்று இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையில் “எது சட்டம், எது ஒழுக்கம் என்பதை அன்றைய தினம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே தீர்மானிப்பார்கள்.‌

இன்று ஒருவர் ஆட்சியில் இருக்கலாம். நாளை வேறொருவர் ஆட்சியில் இருக்கலாம். இன்று  இருப்பவருக்கு இருக்கும் பார்வை நாளை இருப்பவருக்கு மாறுபடலாம். அடிப்படை உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் உரிமையை அரசிடம் கொடுத்துவிட்டால் அன்றைய தேதியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் உரிமைகளைத் தீர்மானிப்பார்கள்” (“Obviously what is law, what is morality will be determined by the Executive of the-day and when the Executive may take, one view another Executive may take another view and we do not know what exactly would be the position with regard “to fundamental rights, if this matter is left to the Executive of the day.”) என்ற மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்த எச்சரிக்கையின் நோக்கம் என்ன? அரசுதான் நமது ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் என்றால், அன்றைய தினம் யார் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களின் நோக்கத்தின் படிதான் எதையும் செய்ய எதிர்பார்ப்பார்கள். அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் புரிதலின்படி எது நல்லதோ அதைத்தான் அனைவரும் நல்லது என்று சொல்லவேண்டிய சூழல் உருவாகும். இது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது. சுதந்திர சிந்தனையை மழுங்கடித்துவிடும்.

பள்ளி கல்வித்துறைஅண்ணல் அம்பேத்கர் தந்துள்ள எச்சரிக்கை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ள பள்ளி விழாக்கள் / நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தனியார் பள்ளியில் நடந்த தேசிய மாணவர் படை (NCC) முகாம், முழுக்க முழுக்க பள்ளியின் சுயநலத்தின் விளைவாக, தனது விளம்பரத்திற்காக நடந்தது. அது சட்ட விரோதமானது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பள்ளியின் முதல்வர் முறைப்படி தேசிய மாணவர் படை அலுவலகத்தில் விண்ணப்பித்து, தனது பள்ளி ஆசிரியர் ஒருவரை பயிற்சி மேற்கொள்ளச் செய்து, தேசிய மாணவர் படைப் பிரிவை முறைப்படி உருவாக்கி இருக்க வேண்டும். பள்ளியில் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு செயல்படுவதற்கு முறைப்படி சான்றிதழைப் பள்ளி பெற்றிருக்க வேண்டும்.

அதற்குரிய அலுவலகங்களின் வழிகாட்டுதல் படியே எந்த முகாமும் நடத்திட வேண்டும். இவற்றைப் பின்பற்றாதது தனியார் பள்ளி நிர்வாகத்தின் தவறு.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் சட்டங்களை, விதிகளை, வழிகாட்டுதலை பல வகையிலும் மதிப்பதில்லை என்ற புகார் பல முறை எழுந்துள்ளது. தனியார் பள்ளிகள் சட்டத்தின் படி நடப்பதை அரசு கண்காணிக்க வேண்டும். சட்ட மீறல்கள் நடந்தால் பள்ளியை அரசு தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் நடத்த முன் வர வேண்டும் தொிவித்துள்ளது.

 

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

1 Comment
  1. க.கணேசன் says

    பள்ளிகளில் விழாக்களுக்கான வழிகாட்டுதல் குறித்து கல்வியாளர் பு, பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் ஜனநாயகச் சிந்தனை விமர்சனம் சரியானது. அரசு அவ்வழி காட்டலை மறு பரிசீலணை செய்ய வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.