தூத்துக்குடியில் மூன்று வயது குழந்தை 51வினாடியில் தேசிய கீதம் பாடி உலக சாதனை !
தூத்துக்குடி அருகே உள்ள வெற்றிவேல்புரம் பகுதியை சேர்ந்த முத்து செல்வன், மலர்விழி தம்பதியணரின் மக்கள் பவனிகா ( வயது 3). இவர் தூத்துக்குடி சுப்பையா வித்தியாலயம் பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் சிறு வயதிலேயே அதிக நினைவாற்றல் பெற்றுள்ள குழந்தை என்பதை அறிந்த அவரது பெற்றோர்கள் குழந்தைக்கு திருக்குறள், தேசிய கீதம் போன்றவற்றை சொல்லி கொடுத்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஜாக்கி புக் ஆப் டெலன்ட் ஐகான் போட்டியில் 51 வினாடிகளில் தேசிய கீதத்தை பாடி உலக அளவில் சாதனை புரிந்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது இந்த சாதனைகளை பெற்றோர்கள் , உறவினர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
— மணிபாரதி.