விருதுநகர் அருகே கடைசி நிமிடத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்  !  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் ஆர்.சி. தெருவை சேர்ந்த சகாய விமலன்(46), இவர் சாத்தூர் பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் இன்று காலை வழக்கம்போல் சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு தனக்கு சொந்தமான ஆட்டோவில் பட்டாசு ஆலை பணிக்குச் செல்லும் 5 பெண் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சின்னக்காமன்பட்டி அருகே சென்றபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாதது போல் உணர்ந்துள்ளார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்
பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

உடனடியாக ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஆட்டோவில் இருந்த பெண்களை பேருந்தில் செல்லுமாறு கூறிவிட்டு, அருகில்  இருந்த டீ கடையில் தண்ணீர் மற்றும் டீ  வாங்கி ஆட்டோவின் உள்ளே சென்று அமர்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் மடைந்துள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்
உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அதை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர் முன் பகுதியில் சாய்ந்து கிடப்பதை பார்த்து அவரை தட்டி எழுப்ப முயற்சித்தனர், ஆனால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் உடனடியாக சாத்தூர் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் சகாய விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடைசி நிமிடத்தில் உடல்நிலையை சரி இல்லாததை உணர்ந்து கொண்டு சுதாரித்து பெரிய விபத்து ஏற்படாமல் தன்னை நம்பி வந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு பிரிந்தது ஆட்டோ ஓட்டுநர் சகாய விமலின் உயிர்.

 

—   மாரீஸ்வரன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.