ஈரோடு இடைத்தேர்தல் விஜய் ரசிகர்கள் – யாருக்கு ஓட்டு !
லயோலா கல்லூரி எடுக்கும் தேர்தல் கால சர்வே பெரும்பாலும் சரியாக இருக்கும். அந்த விதத்தில் ஈரோடு கிழக்குத் தேர்தல் கருத்துக் கணிப்பு ரிப்போர்ட்டை வெளியிட்டார்கள்.
அதில் திமுக 59% நாம் தமிழர் 18% வாக்குகள் என்று கருத்து கணிப்பு கூறியது. இது டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வரையான நிலைமை… திமுக வாக்கு வங்கி என்பது 70சதவீதம் வரை முன்னேற வாய்ப்பு உண்டு… ஏறக்குறைய 50 பேர் கொண்ட குழு 3000 பேரிடம் 30க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் விஜய் ரசிகர்கள் 60% பேர் திமுக கூட்டணிக்கும் ரஜினி அவர்கள் ரசிகர் ஏறக்குறைய 65 சதவீதம் திமுக கூட்டணிக்கும் கமல் ரசிகர்கள் 60% திமுக கூட்டணிக்கும் வாக்களிக்க உள்ளதாக சர்வே கூறுகிறது.
பொதுவாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் ஒன்று தெரிகிறது அதிமுகவிற்கு அடுத்து பலம் வாய்ந்த சக்தியாக ஏறக்குறைய 18% வாக்குகளை பொது தேர்தலில் விஜய் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விஜய் களத்துக்கு வராவிட்டாலும் அவரை ஒரு நல்ல அரசியல்வாதியாக மக்கள் கருவுகின்றனர். தொகுதி முழுவதும் சீமானுக்கு அதிருப்தி இருக்கிறது என்பது சர்வே மூலமாக தெரிகிறது.
பெரியார் பற்றிய சர்ச்சை மக்கள் மத்தியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் மக்கள் கருத்து மூலம் அறிந்து லயோலா கல்லூரி சர்வே கூறுகிறது.
— ஜெயதேவன் – எழுத்தாளர்.