ஒரே பள்ளி இரண்டு முகவரிகள் ! குழப்பத்தில் மாணவா்கள் !
செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி அனுமதியில் தேர்வு எழுதிய மாணவ மாணவி, ஜாஸ் மெட்ரிக் பள்ளியில் கட்டண வசூல், அடையாள அட்டை, ஒரே பள்ளி, இரண்டு முகவரியில் இயங்குவதால் மாணவ மாணவிகள் குழப்பம்.
திருப்புவனத்தில் ஒரே முகவரியில் இரண்டு தனியார் பள்ளிகள் பெயர் பலகையுடன் செயல்படுவது பள்ளி மாணவ, மாணவியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனத்தில் சிவகங்கை ரோட்டில் செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் தனியார் பள்ளி 100 மாணவ, மாணவியர்களுடன் செயல்பட்டு வந்தது.

திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பலரும் இங்கு கல்வி பயில்கின்றனர்.
இந்நிலையில் மேலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகம் செயிண்ட் மேரீஸ் பள்ளியை லீஸ்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து புதிய பள்ளி நிர்வாகம் ஜாஸ் மெட்ரிக் பள்ளி என பெயர் பலகை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டண வசூல், அடையாள அட்டை, வழங்கியதுடன் கூடுதலாக மாணவ ,மாணவியர்களை சேர்த்துள்ளது.
ஜாஸ் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் செயல்பட எந்த வித அனுமதியும் பெறாத நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஜாஸ் என்ற பெயரிலேயே பள்ளி செயல்பட்டு வருகிறது.
இது குறித்து பெற்றோர்கள், கல்வி துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளுக்காக மாணவ, மாணவியர்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பெற்ற நிலையில் எந்த வித அங்கீகாரமும் பெறாமல் திருப்புவனத்தில் தனியார் பள்ளி மவுனம் சாதித்து வருகிறது.
பொதுத்தேர்வுகளுக்காக அனைத்து பள்ளிகளும் ஆவணங்களை சேர்த்து வைத்துள்ளது.

கலைமணி
செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி பெயரில் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் பள்ளியில் கட்டணங்கள் மற்றும் அடையாள அட்டை எல்லாம் ஜாஸ் மெட்ரிக் பள்ளி என உள்ளது.
ஒரு முகவரியில் ஒரு பள்ளிதான் செயல்பட முடியும், ஆனால் இங்கு மட்டும் ஒரு முகவரியில் இரண்டு பள்ளி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மாணவ, மாணவியர்களிடம் பழைய பள்ளி பெயரில் தான் பொதுத்தேர்வு எழுத முடியும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி பெயர் ஜாஸ் மெட்ரிக் பள்ளி , பொதுத்தேர்வு செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி என தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியை தொடா்பு கொண்டபோது இதுபோன்று ஒரு முகவாியில் இரண்டு பள்ளிகள் செயல்பட அனுமதி கிடையாது. எனவே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளோம். முறையான பெயா் மாற்ற விதிமுறைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
— ஜெய்ஸ்ரீராம்.