பக்தரிடம் அன்புடன் உறவாடி உணவருந்திய மயில்கள்! வைரல் வீடியோ!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வந்த பக்தரிடம் அன்புடன் உறவாடி உணவருந்திய மயில் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மனிதா்களுடன் உறவாடும் மயில்கள்
மனிதா்களுடன் உறவாடும் மயில்கள்

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலை கிராமம் உள்ளது. இந்த குருமலையின் அருகே மலைக் குன்றுகள் மற்றும் காப்பு காடு உள்ளது. இங்குள்ள காப்பு காட்டில் அதிக அளவில் மான் மற்றும் மயில்கள் உள்ளன. மலைக்குன்று மற்றும் அதன் அடிவாரத்தில் முருகன் , அய்யனார் கோவிலில்கள் உள்ளன‌.

இந்த கோவில்களுக்கு நேற்று புது பச்சரிசியை சேர்ந்த செல்வம் முருகன் என்பவர் சென்று விட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் மயில்கள் உலாவதை பார்த்தவர் தன் கையில் வைத்திருந்த நிலக்கடலையை அவர்களுக்கு உணவாக   அளித்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அப்போது ஒரு மயில் மட்டும் அவரைத் தேடி வந்து அவரின் கையில் இருந்த நிலக்கடலையை பெற்று உணவருந்தியது. அது மட்டுமல்லாது செல்வமுருகனுடன் அன்புடன் இந்த மயில் பழகிய அசத்தியது.

இந்தக் காட்சிகளை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

—    மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.