மரண பயத்தை காட்டி வரும் 35 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டி !
எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பழமையான நீர்த்தேக்கத் தொட்டியை ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக இடித்து அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குறியம்மாள்புரத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தரைதள நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே நீர் ஏற்றி பயன்படுத்தப்பட்டதாகவும்; அதனைத் தொடர்ந்து தற்போது வரை குடிநீர் ஏற்றாமல் பயன்பாடு இன்றியே காணப்படுகிறது. இதனால் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் இருப்பிடமாக காணப்படுகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நீர்த்தேக்க தொட்டியின் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உடைந்து விழுந்து வரும் நிலையில், நீர்த் தேக்க தொட்டிக்கு அருகே உள்ள கோவில் வளாகத்தில் விளையாடுவதற்காக வரும் சிறுவர்கள் இந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றியும் விளையாடி வருவதாக கூறுகின்றனர்.
இதனால் சிறுவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் விஷ ஜந்துக்களால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கும் இப்பகுதி கிராம மக்கள் இந்தத் தரை தள நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றக்கோரி கோவில்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் முதல் தேனி மாவட்ட ஆட்சியர் வரை புகார் கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக தரைதள நீர் தேக்கு தொட்டியை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்.