“ மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்”
நீதிபதி கே.சந்துரு அவர்கள் எனக்கு சற்றுமுன் அனுப்பியுள்ள ‘வாட்ஸப் மெசேஜ்’
“சார், நீங்கள் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது. மாறாக அந்த தோழர்களிடம் அது போன்ற நிகழ்வுகள் எவ்வளவு பிற்போக்குத் தனமானது என்பதை புரிய வைக்க வேண்டும்.
இல்லையென்றால் அவற்றை முகநூலில் பதிவிடாமல் தவிர்க்கலாம்.
தொழிற்சங்கங்களில் இதே பிரச்சினை எனக்கு இருந்தது. ஆனால் மாதர் சங்கத்தின் உதவியுடன் கொஞ்சம் குறைக்க முடிந்தது. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு எதிராகக் கட்டாயம் கருத்தியல் ரீதியாகப் போராடவேண்டும்.

மஞ்சள் நீராட்டு விழா அந்த குழந்தைக்கே நல்லதல்ல. ஊரைக்கூட்டி அறிவிப்பது மடத்தனம்.”
நீதிபதி கே.சந்துரு அவர்களின் கருத்தை மனதில் கொள்ளுங்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரசியல் தளத்தில் வலதுசாரிப் போக்கை எதிர்த்துக்கொண்டு பண்பாட்டுத் தளத்தில் அதை ஊக்குவிப்பது கடைசியில் அரசியலிலும் வலதுசாரிப் போக்கு வலுப்பெறுவதிலேயே சென்று முடியும். எனவே, இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
— ரவிக்குமார்.