அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” – கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். “பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வளர்ச்சிக்கு சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது நிறைவேறி உள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர் அதன் அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் பிறந்தநாள்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், தமிழ்நாடு பாத்துக்காப்பான மாநிலமாக உள்ளது. இன்று அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று தெரிவித்தார்.

 

—   மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.