அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான தீர்ப்பில் கருத்து கேட்பது குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் செயல் ! வழக்கறிஞர் பாலமுருகன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அண்மையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு குறித்து, உச்சநீதிமன்றத்திடம் கருத்து கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன், பின்வரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பத்ரிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு the  State of Tamil Nadu vs the governor of Tamil Nadu வழக்கில் வழங்கியது. அந்த தீர்ப்பு அதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் அதன் மீது அமர்ந்து உட்கார்ந்து கொண்டு மாநில அரசுகள் ஆட்சி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்படும் ஆளுநர்கள். மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் தரவேண்டும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திரெளபதி முா்மு
திரெளபதி முா்மு

குடியரசு தலைவருக்கு அனுப்பினால் ஒரு மாதத்திற்குள் அனுப்ப வேண்டும்.  குடியரசு தலைவர் ஏதேனும் பெரும் சட்ட சிக்கல் இருப்பதாக கருதினால் உச்சநீதிமன்றத்தில் அறிவுரை கேட்டு சட்டங்களுக்கு அனுமதி வழங்கலாம். மேலும் ஆளுனருக்கோ அல்லது குடியரசு தலைவருக்கு தனிப் பட்ட முறையில் எந்த விருப்ப உரிமையும்( discretionary powers)இல்லை என்று தெளிவு பட கூறி விட்டது. மேற்கண்ட தீர்ப்பு எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும் உள்ளது.

Admission Enquiry Form

ஆனால் அந்த தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும் அதை தெளிவுபடுத்த வேண்டும் என 14 கேள்விகளை குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்திடம் எழுப்பி உள்ளார். அவை

1, ஆளுநருக்கு ஒப்புதல் பெற அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு அரசமைப்பு வாய்ப்புகள் என்ன?

2, ஆளுனர் மாநில அரசு அறிவுரை படி நடக்க வேண்டுமா?

3, ஆளுநருக்கு முடிவு எடுக்கும் விருப்ப உரிமை உள்ளதா?

4, ஆளுனரின் உரிமைகளில் நீதிமன்றம் தலையிட முடியுமா? அவ்வாறு செய்ய முடியாது என்று 361 பிரிவு சொல்கிறது.

5, ஆளுநருக்கு சட்டத்தில் கையொப்பம் இட காலம் நிர்ணயிக்க முடியுமா?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

6, குடியரசு தலைவருக்கு விருப்ப உரிமை உள்ளதா?

7, ஆளுனர் ஒரு சட்டத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போது உச்சநீதிமன்றம் அறிவுரை கேட்கலாமா?

8, இதில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியுமா?

9,இது போன்ற சட்டம் சார்ந்த வழக்குகளை முடிவு செய்ய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் முடிவு செய்யவேண்டும்.

10, உச்சநீதிமன்றம் தனது 142 அரசமைப்புச் சட்டம் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்க முடியுமா?

11. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய முடியுமா?

இந்த கேள்விகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் வழக்குரைஞர்கள் வழக்கில் தங்களின் வாதத்தில் எடுத்து வைத்து அவைகள் உச்சநீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த கேள்விகளை விவாதித்து இறுதியில் உச்சநீதிமன்றம் ஆளுனர் மற்றும் குடியரசு தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குடியரசு தலைவர் தீர்ப்பை பற்றி எதுவும் தெரியாதது போல் உச்சநீதிமன்றத்தில் கேள்விகள் கேட்பது ஒருவகையில் அதனை அச்சுறுத்தல் செய்வதாக கருதவேண்டும். ஒரு பதிலை இரண்டு முறை ஒருவர் கேட்பதற்கு பெயர் விளக்கம் அல்ல , மிரட்டல்.

 ஆர். என்.ரவி
ஆர். என்.ரவி

இந்திய அரசமைப்புச் சட்டம்  அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு அடுத்து உலகில் அதிக காலம் வாழ்ந்து வரும் அரசமைப்புச் சட்டமாக உள்ளது. அதற்கு ஏதோ ஒரு வகையில் உச்சநீதிமன்றம் அதனை பாதுகாக்கும் பணியை தனது தலையீடுகள் மூலம் செய்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை ஆட்சியாளர்கள் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதற்காக செய்ய முடியாது என்ற கேசவானந்த பாரதி வழக்கு, ஆளுநர்கள் விருப்பப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை 356 படி கலைத்ததை தடுத்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து ஆளுனர்களுக்கு கால நிர்ணயம் செய்த வழக்கு என மக்களாட்சி ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலால் பாதிப்படையாமல் காக்கிறது.

இந்த தீர்ப்பை இரத்து செய்யும் நோக்கில் அப்பாவி போல குடியரசு தலைவர் கேட்கும் கேள்வி உள் நோக்கம் கொண்டது. அச்சுறுத்தல் வகையை சார்ந்தது. இந்த சனநாயக மற்றும் சட்டவிரோத கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்ல தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.