ரிதன்யாவின் பெற்றோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்!
ரிதன்யா தற்கொலைக்கு வரதட்சணைக் கொடுமை காரணம் கிடையாது என்றே தெரிகிறது. அந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்தால் ரிதன்யாவின் தரப்பில் ஏதோ மறைக்கப்படுவது தெரிகிறது. பையனை பற்றி தெரியாமல் கொடுத்து விட்டோம் என்பது முதல் பொய். முக்கால் கிலோ மீட்டர் மட்டுமே தூரத்தில் இரு வீடும் இருக்கும் நிலையில் மாப்பிள்ளை கவின்குமார் அந்த ஏரியா சேர்மன் மகன் அந்த பையன் பற்றி எதுவுமே தெரியாது என்பதே பொய்.
மாப்பிள்ளை வீட்டார் பெரும் கோடீஸ்வரர்கள். பணத்துக்கு ஆசைப்பட வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு பலநூறு கோடிகளுக்கு அதிபதிகள். மணப்பெண் ரித்ன்யாவிடம் இருந்து அவர்கள் நகைகளை வாங்கவே இல்லை. அவர் பொருப்பில்தான் விட்டிருந்தனர். ஆனால் ரிதன்யாவுக்கு ஆரம்பம் முதலே வேறு ஏதோ ஒரு காரணத்தால் இந்த திருமணத்தில் ஒவ்வாமை இருந்துள்ளது.
மேலும் தந்தை வீட்டிலேயே அவர் சில முறை திருமணத்துக்கு முன்பே தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ரிதன்யா மற்றும் அவரது பெற்றோர்களின் நடவடிக்கைகள் சிக்கலானவை என்கிறார்கள். இதிலுள்ள முழு உண்மைகளும் போலீஸ் விசாரணையில் வர வேண்டும். அரசியல் தலைவர்கள் இது கொங்கு மண்டல விவகாரம் என்பதற்காக தலையிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி விவகாரம் போல கும்பலாக நாம் போடும் சத்தம் உண்மைகளை மறைத்து குற்றமிழைக்காத அப்பாவிகளை தண்டித்து விடக்கூடாது. ரிதன்யாவின் பெற்றோர் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள். தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக எங்கும் குறிப்பிடவில்லை.
எங்கெல்லாம் கல்வி, சொத்து, குடும்ப, சாதி கௌவரம் பெருமையாக காட்டப்படுகிறதோ அங்கெல்லாம் உள்ளுக்குள் குடும்ப உறவுகள் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது. ஒரு பிரச்சனையை மறைக்க சனி பகவானும், ஜோதிடமும் கை கொடுப்பதில்லை ரிதன்யா ஒரு பலியாடு…
— அருள் எழிலன் – மூத்த பத்திரிகையாளர்