சக்தீஸ்வரனுக்கு ஆயுதப்படை பாதுகாப்பு !
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பவர் சக்தீஸ்வரன். காவலர்களால் அஜித் தாக்கப்படும் வீடியோவை எடுத்த முக்கியமான ஆவணத்தை அவர் சமர்ப்பித்துள்ளார். இதனால், அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, தனது பாதுகாப்பிற்காக டிஜிபி அலுவலகத்துக்கு அவர் மனு அளித்த நிலையில், தற்போது அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்