பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கான மருத்துவ முகாம் !
10.07.2025 தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் டாக்டர் ரேகா எம்பிபிஎஸ் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் குழுவினருடன் மாவட்ட துணை மருத்துவ அதிகாரி கலைவாணி அவர்களின் வழிகாட்டுதலின் படி மருத்துவ முகாம் நடைபெற்றது.
பூதலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள். முகாமில் பூதலூர் வருவாய் ஆய்வாளர் செங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளர் அகரப்பேட்டை திருக்காட்டுப்பள்ளி ஆய்வர்கள் கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் வசந்த் மற்றும் அன்பரசன் ஜெயசீலன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.
வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் அனைத்து தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அனைத்து மீடியாக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள். மருத்துவ முகாமில் பொது மருத்துவம் இசிஜி பல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது . சிறப்பான முறையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
— தஞ்சை க. நடராஜன்