400 ஆண்டுகள் பழமையான பெண் சுறாவின் சுவாரஸ்ய பின்னணி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்த உலகில் அவிழ்க முடியாத பல மர்மங்கள் இன்னும் இந்த பெருங்கடல்களில் இருக்கத்தான் செய்கிறது, அதுபோல் தற்போது வட அட்லாண்டிக் பெருங்கடலில்  மிக ஆழத்தின் இருண்ட பகுதியின் வாழும் 400 ஆண்டுகள் பழமையான ஓர் அற்புத பெண் சுறாவை கிரீன்லாந்து விஞ்ஞானிகள் ரேடியோகார்பன் டேட்டிங் முறையில் பயன்படுத்தி கண்டறிந்தனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் அது இன்று வரை உயிருடன் இருக்கிறது.

சுறா மீன்கள்
சுறா மீன்கள்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் கல்வி சேனல் -

இந்த சுறாவின் நீண்ட ஆயுளுக்குக் பொதுவான காரணம், இவற்றின் மெதுவான வளர்ச்சி இவை ஆண்டுக்கு வெறும் 1 செ.மீ. மட்டுமே வளர்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவை தங்கள் 150 வயதில் தான் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்த மெதுவான வாழ்க்கை முறை, இவற்றின் உடல் மற்ற உயிரினங்களைவிட மெதுவாக வயதாகிறது. கிரீன்லாந்தை பொருத்தவரை சுறாக்கள் மெதுவாக முதிர்ச்சி அடைவதால், மீனவர்களின் வலையில் எளிதாக சிக்கி பாதிக்கப்படுகின்றன.

சுறா மீன்கள்தற்போது வரை கடலில் காணப்படும் பெரும்பாலான கிரீன்லாந்து சுறாக்கள் இன்னும் முதிர்ச்சி அடையாத “இளம்” சுறாக்களாக உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு முன்பு, மிக நீண்ட ஆயுள் கொண்ட முதுகெலும்பு உயிரினமாக 211 ஆண்டுகள் வாழும் ‘போஹெட் திமிங்கலம்’ இருந்தது. ஆனால், கிரீன்லாந்து சுறா இந்த சாதனையை முறியடித்துள்ளது.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

—  மு.குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.