பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்ற பலே ஆசாமி ! கலெக்டரின் காரை மறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் !
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் பெண்களுக்கு சென்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 சென்ட் விற்பனை செய்வதாக கூறி பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி ஆசாமியிடம், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்கின் காரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. தேனி புதிய பேருந்து நிலையம் அருகே 196/1, 3 ஏக்கர் 94 செண்ட் பஞ்சமர் இடம் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்வதாக கூறி பெண்களிடம் சென்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 சென்ட் விற்பதாக கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்துள்ளனர்.
இதனால் வீடில்லாத அப்பாவி ஏழை எளிய பெண்கள் செண்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 செண்ட்க்கு பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். மோசடி செய்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜூலை-25 அன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் காரை பெண்கள் முற்றுகையிட்டனர்.
— ஜெய்ஸ்ரீராம்