நம்மள சோலி முடிச்சுட்டாய்ங்க’ விரக்தியில் விஜய்! மீண்டும் சினிமாவில்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 ’நம்மள சோலி முடிச்சுட்டாய்ங்க’  விரக்தியில் விஜய்! மீண்டும் சினிமாவில்!

விஜய் [எ] ஜோசப் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை விக்கிரவாண்டி ’வி’ சாலையில் ஆரம்பித்தார். அதன் பின் கட்சியின் முதலாமாண்டுக் கூட்டம், அதன் பின் பொதுக்குழுக்கூட்டம் ஆகியவற்றை காஸ்ட்லியான கன்வென்ஷனில் செண்டரில் நடத்தி முடித்தார். இப்போது மதுரையில் இந்த ஆகஸ்ட் மாதக் கடைசியில் மாநாடு நடத்தவும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

விஜய் அரசியல்
விஜய் அரசியல்

அவர் கட்சியை ஆரம்பித்தவுடனேயே, “இனிமே பாருங்க தமிழ்நாடே அதிரப்போகுது, ஆளும் திமுக அலறப்போகுது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடை பயணம் ஆரம்பிக்கப் போறாரு. ராகுல் காந்தி வரப்போறாரு, திமுகவுக்கு மரண பயம் காட்டப் போறாரு” என சில யூடியூப் கூலிப்படைத் தறுதலைகள் கூச்சல் போட்டன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இன்னும் சில தறுதலைகளோ, “சினிமாவுல 250 கோடி ரூபாய் சம்பளத்தை தியாகம் பண்ணிட்டு வந்திருக்காருய்யா… இனிமே சினிமாத் தொழிலாளர்கள் சோத்துக்கு என்ன பண்ணுவார்கள்? ‘ஜனநாயகன்’ தான் கடைசிப் படம். இனிமேல் தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி தான், விஜய் தான் முதல்வர்” என வில்லுப்பாட்டு பாடினார்கள்.

மமிதா பைஜு - நடிகர் விஜய்
மமிதா பைஜு – நடிகர் விஜய்

நிலைமை இப்படி போய்க்கிட்டிருக்கும் போது தான், இந்த கூலிப்படை தறுதலைகளின் தலையில் மண் அள்ளிப் போட்டார் ‘ஜனநாயகன்’ ஹீரோயின் மமிதா பைஜு. அதாவது ”ஷூட்டிங்கின் போது கேரவனில் தன்னிடம் விஜய் பேசும் போது, அடுத்த படத்தில் கமிட்டாக விருப்பதாகச் சொன்னார்” என  ஒரு பேட்டியில் ‘லைட்’டாக மமிதா போட்ட போடு விஜய்யின் கூலிப்படையை குலைநடுங்கச் செய்துவிட்டது.

“யோவ்..ஒன்னை நம்பி நாங்க இங்க ஒப்பாரி வச்சுக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா கேரவனுக்குள் ஒய்யாரமா மமிதாகிட்ட லைட்டா எடுத்துவிட்ருக்க. கேரவனுக்குள்ள பேசுனாலும் கேர்ஃபுல்லா பேச வேணாமாய்யா. சரி இதையும் சமாளித்துத் தொலைக்கிறோம்” என்ற கடுகடுப்பில் மீண்டும் யூடியூப் இழவு வீட்டுக்கு வந்தார்கள்.

விஜய் - எம்.ஜி.ஆர்
விஜய் – எம்.ஜி.ஆர்

“அது ஒண்ணுமில்லங்க, அவரு மீண்டும் சினிமாவுக்கு வந்தாலும் தப்பில்லங்க. எம்.ஜி.ஆர்.அப்படித்தாங்க,  திமுகவுல எம்.எல்.ஏ.வா இருக்கும் போதே பல படங்கள்ல நடிச்சிருக்காருங்க. இரட்டை இலைய ‘இதயக்கனி’யில காட்டிருக்காருங்க. திமுகவின் அடக்குமுறையையும் மீறி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ரிலீஸ் பண்ணுனாருங்க. அதற்குப் பிறகும் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்துல நடிச்சாருங்க. அதுனால விஜய் சினிமாவுல நடிக்குறதுல தப்பில்லைங்க” என தாறுமாறு தக்காளிச் சோறு கிண்டி, விஜய்யையே கிறுகிறுக்க வைத்தார்கள் தறுதலைகள்.

இன்னொரு பக்கம் “இப்ப மதுரையில் நடக்கப் போகும் மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் திரளப் போகிறார்கள். தமிழ்நாடே திணறப்போகுது. ஏகப்பட்ட கட்சிகள் விஜய் வீட்டு வாசலில் நிக்கப் போகுது…நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது…” என சாமக்கோடாங்கி போல கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இப்படியெல்லாம் பல திக்குகளிலிருந்தும் கூலிப்படைகள் கூவினாலும் விஜய் நினைத்தற்கு நேர்மாறாக ஏறுக்குமாறாகத் தான் எல்லாமே நடக்கின்றன.

  அதாவது “அரசியலுக்கு வரப்போறேன் என ரஜினி சொன்னதுமே, கல்விக் கொள்ளையர்களான ஐசரி கணேஷ், ஏ.சி.சண்முகம், விஐடி விஸ்வநாதன் போன்ற தமிழ்நாட்டின் தனவந்தர்களும் ஒரு லெட்டர் பேட் இயக்கத்தை ஆரம்பித்து அதை நடத்தவே வக்கில்லாத தமிழருவி மணியன் போன்ற அரசியல் அனாதைகளும், பிஜேபி.யிலிருந்து டெபுடேஷனில் அனுப்பப்பட்ட அர்ஜுனமூர்த்தி, லைக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராஜு மகாலிங்கம் போன்ற மடையர்களும் ரஜினிக்கு பல்லக்கு தூக்கினார்கள்.

ரஜினி - விஜய்
ரஜினி – விஜய்

ஆனால் ரஜினியோ…’ஆத்தாடி என்னோட பாடி தாங்காது, அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது” என ஓட்டம் பிடித்ததால், பல்லக்கு தூக்கியவர்களின் பொழப்பு பல் இளித்தது.

   ரஜினியிடம் போனவர்கள் தனவந்தர்கள், ஆனால் விஜய்யிடம் வந்து சேர்ந்திருப்பதோ தற்குறிகள் கூட்டம். கல்விக் கொள்ளையர்களோ, தொழிலதிபர்களோ, யூடியூப் தறுதலைகள் மாரடித்தது போல ஐ.ஏ.எஸ்.களோ, ஐ.பி.எஸ்.களோ யாருமே எட்ட்டிப்பார்க்கவில்லை. இப்போதைக்கு அருண்ராஜ் என்கிற ஒரே ஒரு ஐ.ஆர்.எஸ்.ஆபீசரை மட்டும் டி.வி.கே.வில் டூட்டி போட்டுள்ளது பி.ஜே.பி.

இதையெல்லாம் பார்த்து, அனுபவித்து நொந்து நொம்பலமாகிவிட்டாராம் தவெகவின் தலைவர் விஜய். ”நம்மள முட்டுச் சந்துல கொண்டாந்து நிப்பாட்டிடாய்ங்களே” என்ற விரக்தியில் மமிதா பைஜுவிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடிவெடுத்துவிட்டாராம். அதாங்க சினிமாவில் மீண்டும் நடிப்பதுங்கிற முடிவுக்கு வந்துட்டாராம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி.செளத்ரியின் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’. இந்த நிறுவனத்தின் 98-ஆவது படமான ‘மாரீசன்’ கடந்த மாதம் ரிலீசானது. 99-ஆவது படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துவிட்டார் செளத்ரி. இதில் விஷால் நடிக்க, ரவி அரசு டைரக்ட் செய்கிறார்.

ஆர் பி சௌத்ரி - விஜய்
ஆர் பி சௌத்ரி – விஜய்

  100-ஆவது படத்தை விஜய்யை வைத்து மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறார் செளத்ரி. சூப்பர்குட் பிலிம்ஸின் 100-ஆவது படத்தில் விஜய் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி, செளத்ரியிடம் கால்ஷீட்டையும் கன்ஃபார்ம் பண்ணிவிட்டாராம் விஜய்.

சரி, விஜய் இத்தோடு நிறுத்திக்குவாரான்னு  பார்த்தா… அதான் இல்ல. அடுத்த படம் அம்பானியின் கம்பெனிக்கு. இதற்கடுத்த படம் தான் செம த்ரில்லிங்கான ட்விஸ்டே.. சன் பிக்சர்ஸுக்குத் தான் அந்தப் படம். அதுக்கடுத்து இரண்டு படங்கள்னு வரிசையாக ஐந்து படங்களில் நடிக்க பக்காவாக ப்ளான் போட்டுவிட்டாராம் விஜய்.

ஒரு படத்துக்கு 200 கோடின்னு வச்சாலும் அடுத்த அஞ்சு வருசத்துல 1000 கோடி கல்லா கட்டுறது பெருசா? அரசியல் பெருசா? அட போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும்… இதான் தவெக விஜய் [எ] ஜோசப் விஜய்யின் நெக்ஸ்ட், ரெஸ்ட் ப்ளான்.

-கரிகாலன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.