சாக்கடைக்குள் இறக்கி மனித கழிவுகளை அகற்ற கட்டாயப்படுத்திய பிரியாணி கடை மேலாளர் !
தேனி பெரியகுளம் சாலையில் ஆசிப் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேலாளர் செந்தில், மூன்று இளைஞர்களை கடையில் உள்ள கழிவுநீர் முழுவதும் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்ய வேண்டும் என கூறி வெங்கடேஷ், அய்யனார், ஜெகதீஷ், ஆகிய மூன்று பேரையும் வேலைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது மூன்று இளைஞர்களையும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு சரி செய்து விட்டனர். பின்னர் மனித கழிவு நீர் கால்வாய் செல்லக்கூடிய சாக்கடை மனிதக் கழிவுகளையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று பேரையும் கட்டாயப்படுத்தி அள்ள வைத்துள்ளனர்.
அப்போது மூன்று பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை ஆசிப் பிரியாணி கடை மேலாளர் செந்தில் இடம் கூறிய போது அது ஒன்றும் செய்யாது நீங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளையும், சாக்கடைகளையும் அள்ளவில்லை என்றால் உங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என மிரட்டி உள்ளனர்.
இதனால் வேறு வழி இன்றி மூன்று இளைஞர்களும் மனித கழிவு சாக்கடைகளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அப்புறப்படுத்தினர்.
எனவே 3 இளைஞர்களையும் கட்டாயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மனித கழிவு சாக்கடைகளை அள்ள வைத்து ஆசிப் கடை மேலாளர் செந்தில் மற்றும் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிநேக பிரியாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்