காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !
தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு மசாஜ் சென்டரில் வேலை செய்யக்கூடிய சென்னையைச் சேர்ந்த பெண் மற்றும் வெஸ்ட் பெங்கால் சேர்ந்த சேர்ந்த பெண்கள் இருவரும் சேர்ந்து தனது ஆண் நண்பருடன் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டி சந்திரன் மகன் விக்னேஷ் (23) பாண்டி மகன் குணால் (25) உதயகுமார் மகன் ஹரிஹரன் (21) இவர்கள் மூவரும் முல்லைப் பெரியாற்றின் கரையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது மூவரும் சேர்ந்து ஆண் நண்பரை தாக்கி விரட்டி அடித்து விட்டு இரண்டு பெண்களை தூக்கி சென்று கற்பழிக்க முயற்சி செய்தனர். அதில் ஒரு பெண் தப்பி ஓடி அருகே உள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் அந்த இரண்டு பெண்களையும் மீட்டனர். பின்னர் வீரபாண்டி போலீசார் மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்