ஓய்வின்றி உழைக்கும் போக்குவரத்து பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நிர்வாக இயக்குநர் K.தசரதன்   (08-08-2025) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் அன்பு மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் என 225 நபர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மருத்துவ முகாம்முகாமில் பொது மருத்துவம், எலும்பு மருத்துவம், மூளை நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், மகளிர் நல மருத்துவம், வயிறு சம்மந்தமான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் சக்கரை அளவு இரத்த அழுத்த பரிசோதனை, ECG. ECHO பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாள் நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவர்களுக்கும், பரிசோதனைக்கு பிறகு மாற்று மருந்துகள் வழங்கப்பட்டு தேவையான அறிவுரைகளும், ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

முகாமை தொடங்கி வைத்த நிர்வாக இயக்குநர் அவர்கள் நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதால் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்பொழுது செய்து கொள்ள வேண்டும். இரவு, பகல் பாராது உழைக்கின்ற போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மருத்துவ முகாம்தமிழ்நாடு முதலமைச்சர்  விரிவான காப்பீடு திட்டத்தில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய குடும்பத்தினரும் அவ்வப்பொழுது பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இம்முகாமில் பரிசோதனைகளுக்கு பிறகு உரிய மருந்து, மாத்திரைகளும்  வழங்கப்படுகின்றது. இது போன்ற அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதோடு நலமுடன் வாழ்த்துகின்றேன் இவ்வாறு நிர்வாக இயக்குநர் வாழ்த்தி பேசினார். மேலும் முகாமை தொடங்கி வைத்த நிர்வாக இயக்குநர் அவர்களும் பரிசோதனை செய்து கொண்டார்.

இம்முகாமில் முதன்மை நிதி அலுவலர் T.சந்தான கிருஷ்ணன், பொது மேலாளர்கள் K.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்),  N. முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), துணை மேலாளர் S.தங்கபாண்டியன், உதவி மேலாளர் G.ராஜ்மோகன், அன்பு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கரிகாலன், மருத்துவர் N.விஜயகுமரன், மருத்துவர் S.அழகுராஜா, மருத்துவர் M.முகம்மது அசாருதீன், மருத்துவர் M.கார்த்திக் மெய்யப்பன், மருத்துவர் S.விக்னேஷ்வரன், மருத்துவர் K.சௌந்தர்யா, மருத்துவர் K.இனியன், மருத்துவர் M.மதன்ராஜ், மருத்துவர் M.புவனேஸ்வரி, ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.