ஐ.டி.ஐ. படித்தவரா நீங்கள் ? ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அட்டகாசமான வாய்ப்பு !
தமிழகத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களின் இலக்கு பெரும்பாலும் பெல் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்பதாக இருக்கும். அடுத்து, எப்படியாவது ரயில்வே துறைக்குள் நுழைந்துவிடுவது என்பதாக இருக்கும். அதைவிட, குறைந்தபட்சம் ஐ.டி.ஐ. படித்து முடித்தவுடன் அப்ரண்டீஸ் (தொழிற்பழகுநர்) பயிற்சியாவது பெல் நிறுவனத்தில் சேர்ந்து முடித்துவிட வேண்டுமென்ற வேட்கை இருக்கும். அப்போதுதான், பிற்காலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும்போது, அதே நிறுவனத்தில் அப்ரண்டீஸ் முடித்திருந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்.
கடந்த 2023, 2024, 2025 ஆம் ஆண்டில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கான அட்டகாசமான அப்ரண்டீஸ் வாய்ப்பை வழங்கப் போகிறது, இராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனம்.
பிட்டர் பிரிவில் 135 இடங்கள்; வெல்டர் பிரிவில் 90 ; டர்னர் – அட்வான்ஸ்டு சி.என்.சி. மெக்கானிக் பிரிவில் 20 இடங்கள்; மெஷினிஸ்ட் – ஓ.ஏ.எம்.டி. பிரிவில் 12 இடங்கள்; இண்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பிரிவில் 4 இடங்கள் ஆகியவற்றுக்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது, இராணிப்பேட்டை பெல் நிறுவனம்.
ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 23 ஆம் தேதி வரையில், இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின், எச்.ஆர்.எம். கான்பிரன்ஸ் ஹால், அட்மின் பில்டிங்கில் நேர்காணல் நடைபெறுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நேர்காணலுக்கு செல்லும்போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ. கல்வி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்; ஆதார் கார்டு; சாதிச்சான்று; மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் நேரில் காலை 9 மணிக்குள்ளாக சென்றுவிட வேண்டும்.
நேர்முகத்தேர்வு தொடர்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில், 04172 – 284626 மற்றும் 04172 – 284881 ஆகிய தொலைபேசி எண்களில் அழைத்து தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.
அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தேர்வாகும்பட்சத்தில், ஓராண்டு தொழிற்பயிற்சி பெறும் காலத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கி மாதந்தோறும் 12000 ரூபாய் ஊக்கத்தொகையும் பெல் நிறுவனமே வழங்கும்.
அப்புறம் என்ன? இந்த அட்டகாசமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரடியாக, உங்களுக்கு சம்பந்தமில்லை என்றாலும், ஐ.டி.ஐ. படித்த உங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிரலாமே!
— அங்குசம் செய்திப்பிரிவு.