சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதியான பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில் சில பகுதிகளை இணைத்து 279 ஏக்கரில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது அந்தப் பகுதியில் ட்ரோன் மூலமாக நிலத்தை அளவிடும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

கும்மியடித்து நூதனப்போராட்டம் இந்நிலையில் கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும் எனவும், மேலும் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட  அழகு நாச்சியம்மன் சிவன் கோவில், பெருங்காட்டு கருப்பு கோயில்கள் உட்பட 25 கோயில்களும் சிதையும் ஆபத்து உள்ளதாகவும்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சிப்காட் டுக்கு‌ எதிர்ப்பு ... கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள்

கோயில்கள்,  காடுகளும், கல்வெட்டுக்களும், பெருங்கற்கால சின்னங்களும் அழியும் நிலை உள்ளதாக கூறி மதுரை மேலூர் கல்லாங்காடு பகுதியில் அமையவுள்ள சிப்காட் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி 18 கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று கூடி  கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதியை பல்லுயிர் தளமாக அறிவிக்க வேண்டும் என கூறியும்  தமிழக அரசை வலியுறுத்தி கும்மியடித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

  —    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.