அரசு மருத்துவரை பலி வாங்கிய அதிகாரிகளின் அலட்சியம் !
சாலைப் பாதுகாப்பும், போக்குவரத்து திட்டமிடலும் மிக மோசமாக செயல்படுத்தப்படும் நகரங்களில் செங்கல்பட்டு முதன்மையானது.
விபத்து நடந்த G.S.T சாலை- மாமல்லபுரம் சாலை இரவுண்டானா எப்போதும் Haphazard ஆக, விபத்துக்கான அறிகுறியுடனே இருந்து வந்திருக்கிறது.
நேராக G.S.T சாலையில் செல்லும் வண்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரம்/ திருப்போரூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக பாலத்திலிருந்து கீழிறங்கி இரவுண்டாணாவை அடையும். அதே நேரத்தில் பெட்ரோல் பங்க்/ சர்ச் சாலையிலிருந்து வாகனங்கள் திடீரென உள்நுழையும்.
சிறு சிறு விபத்துகளாக நிகழ்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்த சிக்கல் இன்றைய விபத்தில் ஒரு மகத்தான/ மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் நல அரசு மருத்துவரை பலி வாங்கியிருக்கிறது.
செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து மார்க்கெட் வரை உள்ள சாலைப் பகுதியினை முறையாக திட்டமிட்டு நெரிசலைக் குறைத்து பாதுகாப்பானதாக மாற்றிட முன்வர வேண்டும்.
- இரவுண்டானாவில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
- மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த Barricades, rumble strips என ஏதாவது செய்ய வேண்டும்.
- இரவுண்டானாவிற்கு அருகிலிருக்கும் இராஜீவ் காந்தி சிலையை காங்கிரஸ் கட்சியின் அனுமதி பெற்று வேறொரு Prime இடத்திற்கு மாற்ற வேண்டும். அல்லது சிலையை பின்னோக்கி நகர்த்தி, அவ்விடத்தில் இருக்கும் நிழற்குடையை அகற்றி பேருந்து நிறுத்தம் அமைத்தால் அச்சாலையின் Traffic வெகுவாகக் குறையும்.
- அதிகமான போக்குவரத்து காவலர்களை deploy செய்ய வேண்டும். 2-3 காவலர்கள் தினந்தோறும் பேருந்து நிலைய வாசலில் ஏற்படும் Traffic ஓடு மல்லுக்கட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
- பேருந்து நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றி ஊருக்கு வெளியே கொண்டு சென்றால் மட்டுமே அங்குள்ள மக்கள் கொஞ்சமாவது நடமாட முடியும்.
(செங்கல்பட்டு நிர்வாகம், அதிகாரிகளோடு தொடர்புடையவர்கள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொண்டு செல்ல வேண்டுகிறேன்.)

தமிழ்நாட்டின் Road safety அதளபாதாளத்தில் இருக்கிறது.
விதிமீறல்கள், பாதுகாப்பு குறைபாடுகள், சாலைப்பராமரிப்பில் மெத்தனம்/ கவனக்குறைவுகள் என அனைத்தும் மலிந்து கிடக்கின்றன.
இதன் விளைவாக தினந்தோறும் மக்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சர் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து Originally functioning Injury prevention task force and expert panel ஐ அமைக்க வேண்டும். அவற்றின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த மருத்துவர் மணிக்குமார் அவர்களின் சக மருத்துவர்கள், ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர்வோம்.
— யோகேஸ்வரன் இளங்கோவன்,மருத்துவர்