பட்டியல் சமூக கவுன்சிலருக்கு இரட்டை டம்ளர் பாகுபாடு ! சர்ச்சையில் சிக்கிய பேரூராட்சி சேர்மன் !
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில், 12 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 9 வது வார்டு கவுன்சிலர் இறந்து விட்டதால், 11 வார்டு கவுன்சிலர்கள் தற்பொழுது செயல்பட்டு வருகின்றனர்.
இன்று (19.08.2025) பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மார்க்கையன் கோட்டை பேரூராட்சி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை. மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து தீர்மானங்களிலும் தன்னிச்சையாக சேர்மன் முருகன் செயல்பட்டு வருவதாகவும் துணை சேர்மன் உட்பட 3 கவுன்சிலர்கள் உட்பட நான்கு பேர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக 1 வது வார்டு கவுன்சிலர், பாலு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் இரட்டை டம்ளர் முறை பின்பற்றி வருவதாகவும், அவருடைய வார்டில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்யாமல் தடை விதித்து வருவதாக குற்றம் சாட்டிய வருகின்றனர். இதனால் இன்று நடைபெற்ற மார்க்கையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் நான்கு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்