ஒன்னு வித்து கொடுங்க … இல்ல விக்க விடுங்க ! சந்தன மர சர்ச்சை !
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே தென்பழனியில் தனி நபரிடம் பெற்றுச் சென்ற 2558 கிலோ சந்தன குச்சிகளை திரும்ப ஒப்படைத்தனர்.
சின்னமனூர் தென்பழனி சேர்ந்த ராஜ்குமார். இவர் தனது பட்டா நிலத்தில் வனத்துறை அனுமதியுடன் சிவப்பு சந்தன மரங்களை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த 18 ஆண்டு பராமரிப்புக்கு பின்னர் தற்போது அறுவடைக்கு வந்த சந்தன மரங்களை வனத்துறை மூலமாக விற்பனை செய்ய ராஜ்குமார் முன்வந்துள்ளார்.
அதன்படி வனத்துறையின் முதன்மை தலைமை அலுவலக அதிகாரி பரிந்துரையின் படி ராஜ்குமாரின் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை வெட்டி அதன் மூலமாக 96 தடிகள் 837 வேர்கள் 378 கிளைகள் மற்றும் 258 சீரிய குச்சிகள் என நான்கு பாகங்களாக பிரித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சந்தன மரக் கிடங்கிற்கு 3 லாரிகளில் எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் எடுத்துச் சென்ற அந்த சந்தன மரத்திலிருந்து 2558 மர குச்சிகளை மீண்டும் அவரிடம் ஒப்படைத்ததால் பெறும் நஷ்டம் அடைந்திருப்பதாக விவசாயி புகார் தெரிவித்தார் .
இதனால் விரத்தி அடைந்த விவசாயி ராஜ்குமார் வனத்துறை விதிப்படி சந்தன மரத்தின் அனைத்து கிளைகளையும் அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது சந்தன மரக் குச்சிகளை விற்பனை செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயி ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
— ஜெய் ஸ்ரீராம்