அங்குசம் சேனலில் இணைய

வேலை பறிபோன நிலையில் கணவன் செய்த காரியம் !

வேலையில்லா கணவாின் மன எண்ணங்கள்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

29 வயது பெண் நான். கடந்த ஒரு மாதமாக என் கணவரை பற்றி ஒரு பெரிய சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. ஏனெனில் அவர் அலுவலகத்தில் தான் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தார். என்னோடோ, எங்கள் மகளோடோ பேசவே இல்லை. ஜூன் மாதத்திலிருந்து எங்களுக்கு முழுமையாக உடலுறவும் நிறுத்தப்பட்டது.

பலமுறை வெளியே போய் சின்ன outing போவோமா என்று கேட்டேன். அவர் எப்போதும் தவிர்த்து விட்டார். சனிக்கிழமை கூட அலுவலகம் போக ஆரம்பித்தார். நேற்றோடே என்னால் தாங்க முடியாமல், மிகுந்த கோபத்தில் நான் நேரடியாக அவருடைய ஆபீஸுக்கே போய் விட்டேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்கு என்னை உள்ளே விடவே இல்லை, ID கார்டு இல்லாமல். ஆனால் அவர்கள் ஒரு “admin” நம்பர் கொடுத்து, அவசர நிலை வந்தால் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளலாம் என்றனர். அதை தொடர்பு கொண்டபோது, எனக்கு அதிர்ச்சி தரும் ஒரு உண்மை தெரியவந்தது.

என் கணவர் மே 2025-இல் இருந்தே அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை!

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Reasons For Couple Conflict : இந்த 6 காரணங்களால் தான் கணவன் - மனைவிக்குள் சண்டையே தொடங்குமாம்! அத நிறுத்திட்டா போதும்!அந்த நேரமே என்னுள் சந்தேகம் மிகுந்தது. இதை என் பெற்றோரிடம் சொல்லாமல், அவர் அப்பா அம்மாவை அழைத்து எங்கள் வீட்டுக்கு வரச் சொன்னேன்.

இரவு 9 மணிக்கு, அவர் formal dress-ல, ID கார்டுடன் வந்தார். உடனே அவரது அப்பா,

“எங்கப்பா போயிட்டு வந்த?” என்று கேட்டார்.

அவர் வழக்கம்போல,  “ஆபீஸுக்கு தான். Project romba hectic aa pogudhu… அதனால்தான் late ஆகுது” என்றார்.

அப்போது அவர் அப்பா கடுமையாக, “உண்மைய சொல்லு பா. நீ ஆபீஸ்ல இருந்து 3 மாதமா out ஆகிட்டே. இப்போ எங்க வேலை செய்ற? பொய் சொல்லாதே பா” என்று கேட்டார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அந்த நிமிஷத்தில் அவர் உடைந்து போனார். கண்களில் கண்ணீர் வழிந்தது. அவரது அம்மாவும் நானும் அவரை ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் உண்மையை வெளிப்படுத்தினார்.

மே மாதத்தில் அவர் company-யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக. செலவுகளை somehow manage செய்ய, ஜூன் மாதம் முதல் food delivery வேலை செய்ய ஆரம்பித்ததாக.

அவர் தினமும் காலை formal dress-ல வீட்டை விட்டு புறப்படுவார். அருகிலுள்ள ஒரு public restroom-க்கு சென்று, அங்கே delivery uniform-ஆக மாறி, முகக்கவசம் போட்டு parcels deliver செய்வார். இரவு திரும்பி வந்ததும் bathroom-க்கு சென்று குளித்து, மீண்டும் formal dress-ல வந்துவிடுவார்.

இந்த உண்மையை எங்களிடம் மறைத்ததன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் எப்போதும் அவரை கஷ்ட நேரங்களில் தவறாக நடத்தவே இல்லை. மாறாக, நாங்கள் அவருக்கு துணை நிற்கவே விரும்பினோம். ஆனால் அவர் தான் “inferiority” காரணமாகவும், தொடர்ந்து தோல்வி தரும் interview-களாலும், domain-இல் வேலைகள் குறைவாக இருப்பதாலும் மனமுடைந்து போயிருந்தார்.

வேலையில்லா கொடுமைஇப்போது அவரை எப்படி கையாள்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று — அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

அவரது அனுமதியோடு தான் நான் இந்தக் கதையை பகிர்கிறேன். ஏனெனில், இவரைப் போலவே பல கணவர்கள் வேலை இழந்து குடும்பத்தைக் காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஒருகாலத்தில் தன்னம்பிக்கையுடன் இருந்தவர்கள். இப்போது சூழ்நிலை காரணமாக தடுமாறுகிறார்கள்.

வெளியே தெரியும் ஒரு பொறுப்புள்ள ஆணின் நடவடிக்கைகளை வைத்து அவன் உள்ளே கணன்று எரியும் பிரச்சனையை புரிந்து கொள்ளவது சற்று கடினம்..

அவர்களை மீண்டும் எழுப்பி நிறுத்துவது, அவர்களை ஆதரித்து, துணை நிற்பது — அதுதான் ஒரு நல்ல குடும்பத்தின் பொறுப்பு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.