அங்குசம் சேனலில் இணைய

ஆன்மீக பயணம்! தஞ்சைப் பெரிய கோவில் !

தஞ்சாவூர் பெரியகோவில் வரலாற்று சிறப்புகள்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தஞ்சைப் பெரிய கோவில் சோழப் பேரரசர், ராஜ ராஜ சோழனால் கிபி 1003-1004ல் தொடங்கி கிபி 1010 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு 1015 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலக பாரம்பரிய சின்னமான இக்கோயில் சோழர்களின் புகழ்பெற்ற கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகளின் சான்றாக திகழ்கிறது.

தஞ்சைப் பெரிய கோவில்இக்கோயிலின், சிறப்பு அம்சம் உலகின் மிகப்பெரிய சிவலிங்கமும் பிரம்மாண்டமான விமான கோபுரமும் ஆகும். பழமையான காலத்தில் இரண்டு அல்லது மூன்று தளங்களைக் கொண்ட கோவில்கள் மட்டுமே கட்டப்பட்ட போது கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில் ராஜராஜ சோழன் 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு பிரம்மாண்ட கற்கோவிலை எழுப்பினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இத்தகைய ஒரு அற்புதமான கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. வீர சோழன் குஞ்சரமல்லன் என்ற ராஜராஜ பெருந்தச்சன் இக்கோயிலின் தலைமை கட்டட கலைஞர் ஆக நியமிக்கப்பட்டார். மேலும், பிரம்மாண்டமான சிவலிங்கத்தை உடைய இக்கோயில் பெரிய கோயில். ராஜ ராஜேஸ்வரம், பெருவுடையார் கோவில் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

தஞ்சைப் பெரிய கோவில்இக்கோவில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோவிலில் சிவலிங்கம் 212 அடி அதாவது 64.8 மீட்டர் உயரமானது, இது நாட்டில் உள்ள சிவன் கோவில் மிகப்பெரிய சிவ லிங்கங்களில் ஒன்றாகும். கோயிலின் முன் இருக்கும் நந்தி 20 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன பிரம்மாண்டமான நந்தியும் இக்கோயிலின் சிறப்புகளின் இதும் ஒன்றாகும். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தியாகும். இந்த நந்தியை பார்ப்பதற்கு கம்பீரமாகவும், பெரியதாகவும் இருக்கும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எனவே இத்திருக்கோவிலை பெரிய கோவில் என குறிப்பிடுவது ஆச்சரியம் இல்லை. இந்த நந்தி சிலை உள்ள கோபுரத்தின் மேற்கூரையில் பார்ப்பதற்கு அத்தனை அழகுகள் நிறைந்த ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அக்கால தமிழர்களின் கல்வெட்டுக்களும் ஓவியங்களும் மிக அழகு. அதனை வர்ணிக்க அழகு அற்புதம் என்ற தமிழ் வார்த்தைகள் போதாது.

Big Nandi Thanjavur Temple Unesco World Stock Photo 1370258156 |  Shutterstockமேலும், தமிழர்களின் கட்டிடக்கலை திறனுக்கு சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது. மேலும் இக்கோவிலின் கோபுரத்தின் உச்சியில் 81.5 டன் எடையுள்ள ஒரே ஒரு கருங்கல்லை கொண்டுள்ள உள் வட்டம் என்னும் பகுதி கட்டுமான பணியின் போது எவ்விதமான சாய்மானமும் இல்லாமல் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அந்த காலத்தில் இருந்த பொறியியல் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மேலும், இந்த உயரத்திற்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அப்போது எந்த விதமான நவீன தொழில்நுட்பங்களும் இல்லாத நிலையில் இது சோழ மன்னர்களின் பொறியியல் திறன் பிரமிக்க வைக்கிறது. சாய்மானம் இல்லாமல் கற்களை நகர்த்திய விதம் மற்றும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகள் ஆகியவை இன்றும் வியக்க வைக்கின்றன. கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு இடிதாங்கி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுத் துறையினர் குறிப்பிட்ட இடைவெளியில் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கின்றனர்.

தஞ்சைப் பெரிய கோவில்இக்கோவிலில், செதுக்கப்பட்ட சிற்பங்கள் காண அவ்வளவு அழகாக இருக்கும். தஞ்சை பெரிய கோவில் சென்றிருந்தால் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர்களிலும் கூட நந்திகள் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். இக்கோவிலின் கோபுரம் மற்றும் வெளிப்புற சுவர்களில் பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் மற்றும் நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட சிற்பங்களும் காணப்படுகின்றன.

Brihadeeswarar Temple - Thanjavur Info | Thanjavur's No. 1 Local Directory  Websiteமேலும், சோழ ஆட்சியின் அடையாளமாக தஞ்சாவூர் நகரம் கருதப்படுகிறது. கல்லணை, சரஸ்வதி மஹால் நூலகம் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியது. பெரிய கோவிலில் உள்ள சுவரோவியங்கள் சோழர்களின் கலை நுணுக்கத்தை காட்டுகிறது. குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில் நடத்தப்பட்ட போர்கள் மற்றும் விழாக்கள் பற்றி இங்கு விளக்கமளிக்கின்றன. இத்துடன் தெய்வீக மற்றும் புராணக் கதைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவில் வரலாறு சித்திரங்களிலும், சிற்பங்களிலும் பிரதிபலிக்கின்றது.

மேலும், இக்கோயிலின் கட்டுமான பணியின் போது பணிபுரிந்த கட்டிட கலைஞர்கள் பெயர்கள் முதற்கொண்டு கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் யுனேஷ் கோவால் 1987 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டது. இது இந்த கோவிலின் முக்கியத்துவத்தை உலக அளவில் வெளிப்படுத்துகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடுபிரதோஷ தினங்களில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் சாமி வடிவத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு மனநிறைவு ஏற்படும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதுவரை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை காணாதவர்கள் நிச்சயமாக ஒருமுறை சென்று இதன் அழகையும், சிற்பங்களின் நுணுக்கங்களையும், சிவபெருமானின் அருளையும் பெற்று ஆன்மீக அமைதி பெற, தஞ்சாவூர் பயணம் மறக்க முடியாததாக மாற்றும்.

 

 —    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.