சமையல் குறிப்பு: மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு பந்துகள்!
உருளைகிழங்கு பந்துகள்
வணக்கம், சமையலறை தோழிகளே! நான் இனி தினமும் உங்களுக்காக ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி சொல்லலாம்னு இருக்கேன், அந்த வகையில நாம இன்னைக்கு பார்க்க போறது மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு பந்துகள், நான் இதுவரைக்கும் செஞ்ச ஸ்நாக்ஸ் வகையிலேயே பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சதுல இதுவும் ஒன்னுனே சொல்லலாம், சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பெரிய உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது கடலை மாவு – 1 கப், கொத்தமல்லி, கருவேப்பிலை பொடிதாக நறுக்கியது, பூண்டு பவுடர் 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கில் கடலை மாவு, நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, பூண்டு பவுடர், மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக (குலோப் ஜாமுன் உருண்டை அளவில்) பிடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்த சிறு சிறு உருண்டைகளை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான கிரன்ச்சியான உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதனை மயோனைஸ் அல்லது டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு சாப்பிடலாம். உங்கள் குழந்தைகள் புதிதாக இருக்கிறது என்று விரும்பி சுவைத்து சாப்பிடுவர். அப்புறம் என்னங்க இன்றே! உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து அசத்துங்கள்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.