பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !
சாலையோரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மரங்களை சேதப்படுத்துவதைத் தடுக்க சிமெண்ட் வேலி அமைக்கப்பட்டுள்ளன. சிமெண்ட் வேலிக்குள் மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதக் குப்பைகள், உணவுப் பொதிகள் போன்றவற்றை வீசுகின்றனர். மேலும், அவற்றை எரிய வைத்து சுத்தம் செய்வதற்காக நெருப்பு வைப்பதால், மரத்தின் அடிப்பகுதி கருகி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் மரத்தின் பட்டை எரிந்து வேர்ப்பகுதியில் சேதம் ஏற்பட்டு, மரம் படிப்படியாக வாடி செத்துவிடும் அபாயம் நிலவுகிறது.
மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.
மரங்களை காக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மரங்களை பாதுகாப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சிமெண்ட் வேலிக்குள் குப்பை போடாமல், பொது இடங்களில் குப்பை எரிப்பது மரங்களுக்கும், சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். மரங்கள் கீழே குப்பை எரிப்பைத் தவிர்க்க வேண்டும்.
— கே.சி.நீலமேகம், செயல் தலைவர், தண்ணீர் அமைப்பு
Comments are closed, but trackbacks and pingbacks are open.