தந்தை பெரியார் தினத்தை முன்னிட்டு த.வெ.க. சார்பில் மின்னொளி கபடி போட்டி !
விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டி கிராமத்தில், தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டு நாள் தென்மண்டல அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஒன்றிய கிளைச் செயலாளர் முத்துவேல் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை, விருதுநகர், பெரம்பலூர், இராமநாதபுரம், கோவில்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 45 அணிகள் கலந்து கொண்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில், முதல் பரிசை சின்ன மூப்பன்பட்டி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அணி,இரண்டாம் பரிசை வலுக்க லொட்டி அணி, மூன்றாம் பரிசை சின்ன மூப்பன்பட்டி அணி வென்று முதல் மூன்று இடங்களை பிடித்தன.
வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.8,000, ரூ.6,000 பணப்பரிசுகளுடன் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்காக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை விருதுநகர் கிழக்கு மாவட்ட மத்திய ஒன்றியம் சிறப்பாக ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.