அங்குசம் சேனலில் இணைய

150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் டாஸ்மாக் மதுபான கிடங்கில் பணிபுரிந்த உதவியாளர் மீது 1998-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இலஞ்ச வழக்கில், நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், தலைமறைவான நபர் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிடிபட்டிருக்கிறார். 1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார். இதனை தொடர்ந்து, விருதுநகர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து, அவரை பொறிவைத்து கைது செய்தது.

பிரேம்குமார்
பிரேம்குமார்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று, 2008 அக்டோபர் 15 அன்று பிரேம்குமாருக்கு 1 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.2,000 அபராத தண்டனை விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதங்கள் மெய்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். ஆனால், 2018 அக்டோபர் 5 அன்று நீதிமன்றம் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தியது. பின்னர், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். அங்கு 2019 செப்டம்பர் 30 அன்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு
மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனை தொடர்ந்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், பிரேம்குமார் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், செப்-16 அன்று  மதுரை வில்லாபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் காவல் ஆய்வாளர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது குறித்து, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இராமச்சந்திரன்,“அரசு அலுவலகங்களில் ஊழல் நடந்தாலோ, அரசு ஊழியர்கள் இலஞ்சம் கேட்டாலோ, பொதுமக்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இலஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம்.

மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – 94981 05882 | ஆய்வாளர்-1 – 9498106118 |  ஆய்வாளர்- 2 80721 52297 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்போரின் பெயர் இரகசியமாக வைக்கப்படும்” என்றார்.

 

-மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.