ஒரே நாளில் 105 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 6 கோடி கடன் வழங்கிய அமைச்சர் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 105 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
”திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று, சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை பெற்றுள்ளனர்.” என்றார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், கோட்டாட்சியர் கனகராஜ், வட்டாட்சியர் ராஜாமணி, அரசு அலுவலர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.