அங்குசம் சேனலில் இணைய

துர்க்கை அம்மனுக்கு துர்க்கை என்ற பெயர் எப்படி வந்தது?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒரு அரக்கன், ஆறடி உயரமும் திடகாத்திரமான உடலும் கொண்டவன். அவன் கண்கள் பெரிதாக, தலைமுடி பரட்டையாக இருந்தது. அவன் பெயர் துர்கா மாசூரன். துர்கா மாசூரன் “காளி” என்று அழைத்தவுடன் காளி தேவி மேலிருந்து வந்து குதித்தாள். காளி பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் பேரழகியாக இருந்தாள். துர்கா மாசுரன் ‘ஆதி பராசக்தியுடன் நான் போர் செய்ய போகிறேன் அவளை நான் கொல்ல வேண்டும் எனக்கு உதவி செய்’ என்றான். காளி தேவி ஆதி பராசக்தியை உன்னால் கொல்ல முடியாது. அவளை கொல்லும் எந்த ஆயுதமும் என்னிடம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த அசுரன், தனது கையை வெட்டிப் போட்டான்.

துர்க்கை
துர்க்கை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அப்போது காளி என் பக்தன் நீ இப்படி செய்யாதே எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றாள். அதற்கு அரக்கன் நீ உதவி செய்யவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றான். பிறகு, தன் கழுத்தை அறுக்க முயற்சி செய்தான். அப்போது காளிதேவி ஆதிபராசக்தியை கொள்ள முடியாது. வேண்டுமானால், ஒரு உபாயம் தருகிறேன் என்று கூறினாள். என்னவென்று அரக்கன் கேட்டான் அப்போது கூறினாள் அவள் மேலிருந்து இறங்கி வரும் பொழுது எந்த ஆயுதத்தையும் தூக்காதே அதற்கு பதில் அவள் எதிரில் அசிங்கமான வார்த்தைகளை பேசு. அவள் அழகில்லை, நிர்வாகத்திற்கு தகுதியில்லை, ஒழுக்கம் இல்லை, வாழ தகுதி இல்லை என்று எல்லாம் நிந்தனை செய். அவ்வாறு செய்தால் அவள் சக்தி இழப்பாள். அப்போது நீ அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாள். அடுத்த நாள் சூரிய உதயம் ஆகும் போது ஆதிபராசக்தி மேலிருந்து இறங்கி வந்தாள். அவள் பார்ப்பதற்கு பேரழகியாக, கிரீடத்துடன் கையில் ஆயுதங்களுடன் வந்தாள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

துர்க்கை
துர்க்கை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

துர்காமாசூரன் ஆயுதங்கள் இல்லாமல் ‘நீ எல்லாம் ஒரு பெண்ணா’ என்று ஏதேதோ வார்த்தைகளை கூறி அவமதித்தான். அசிங்கமான வார்த்தைகள் என்றால் என்னவென்றே தெரியாது இருந்த ஆதிபராசக்தி மந்திரங்களை மட்டும் கேட்டு பயிற்சி பெற்றவள் அவள். அவள் தன்னை பற்றி அசிங்கமாக பேசப் பேச, அவள் தன்னை இழிவாக எண்ணி சக்தி இழந்தாள். குழந்தை போல ஆகி நின்றாள். அரக்கன் அவளை வாள் கொண்டு வெட்ட வந்தபோது சிவபெருமான் அங்கு வந்து ‘ஏய் சக்தி’ நீதானே சிவனுக்கே சக்தி தருபவள்? நீ தானே இந்த உலகை நிர்வகிப்பவள்? நீ இல்லாமல் உலகத்தில் யாரும் இல்லை? நீ இல்லாமல் அணுவும் அசையாது? நீதானே பேரழகி? என்று கூறிக் கொண்டே இருந்தார். சிவபெருமான் இப்படி பேச பேச, ஆதி பராசக்தி மீண்டும் சக்தி பெற்று துர்கா மாசூரனை கொன்றாள். அதிலிருந்து, அவள் துர்க்கை என்று அழைக்கப்பட்டாள். இந்த கதை மூலம் இந்த உலகத்தில் தர்காமாசூரர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் அனைவரும் ஆதி பராசக்தியாக இருக்கிறோம். நமக்கு அசிங்கமான வார்த்தைகள் வரும்போது,’ நீ சொல்வது புரியவில்லை உன் வார்த்தைகள் என்னை பாதிக்காது’ என்று சொன்னால் இந்த உலகம் நம்மை பார்த்து பயப்படும்.

 

-பா. பத்மாவதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.