2026 தேர்தல் சர்வே – வச்சு செஞ்ச ந.கு. வெற்றி கழக தலைவர் !
வச்ச செஞச ந.கு. வெற்றி கழக தலைவர் !
இதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுருக்கீங்களா ? போட்டுருக்கேங்க.
ஓகே வயசு சொல்ல விருப்பம் இருக்குங்களா இல்லையா சார்? இருக்குதுங்க.
நீங்க உங்கள பர்ஸ்ட் அறிமுகப்படுத்திக்கீங்க. நீங்க யாரு பர்ஸ்ட்?
அதுதான் சார். நான் பொலிட்டிகல் சயின்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட் சார். அரசியல பத்திதான் படிக்கிறேன். சோ அரசியல் சம்பந்தமா ஒரு ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கோம் சார். காலேஜ் மூலமா. சோ, அதனால இந்த மாதிரி கேள்விகள் கே்கறேன்.
நீங்க எந்த காலேஜ் படிக்கிறீங்க?
நான் சென்னையில மெட்ராஸ் யுனிவர்சிட்டில படிக்கிறேன் சார்.
உங்களுடைய ஊர் எது? சென்னைதான் சார்.
உங்களுடைய சொந்த ஊரே சென்னைதானா? எல்லாமே சென்னை தான் சார்.
உங்களுக்கு என்ன வயசு தெரிஞ்சுக்கலாமா சார் ? எனக்கு வயசு 36-ங்க.
சரி, 2021 சட்டசபை தேர்தல் நடந்தது இல்லையா ? ஆமாங்க.
அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.
சரி, கரெக்ட். பட் இது வந்து எதுக்காக கேக்குறேன்னா? ஸ்டார்ட்டிங்லே சொன்னேன் இல்லையா? ப்ராஜெக்ட் அந்த ப்ராஜெக்ட்ல கேள்விகள் இருக்கு. அதனாலதான் சார், கேக்குறேன். நீங்க சொன்னீங்கன்னா, எனக்கு மார்க் கிடைக்கும்.
இல்லைங்க, அது என்னுடைய பர்சனல் உரிமையை நீங்க வந்து கேட்க கூடாது.
இல்ல கரெக்ட்தான் சார்.
சரி ரைட் விடுங்க. அது ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுருக்கேன். ரைட் விட்டுருங்க அடுத்தது.
இல்ல சார் ஏன்னா, அப்போதான் மத்தத கேட்க முடியும். அதுக்காகதான் சார் கேக்குறேன்.
இல்லைங்க நான் ஏதோ ஒரு கட்சிக்கு போட்டுருக்கேன். அந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுருங்க. வேற ஏதாச்சு கேளுங்க.
இல்ல சார் ஏன்னா … அதனாலதான் சார் கேக்குறேன்.
அப்படிங்கிறீங்க … சரி, நோட்டாக்கு போட்டேங்க.
நல்லது, அதே மாதிரி 2024 போன வருஷம் மக்களவைத் தேர்தல்ல சார்?
அப்போதும் நோட்டாக்கு தாங்க போட்டேன்.
ஓகே சார். இப்ப தமிழக சட்டவை தேர்தல். எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம்னு நீங்க நினைக்கிறீங்க ?
அப்பவும் நோட்டாக்கு தாங்க போடலாம்னு இருக்கேன்.
ஓகே சார் தமிழகத்துல இப்ப அடுத்த முதலமைச்சரா, யார் வந்தா நல்லா இருக்கும்னு எதிர்பார்க்கறீங்க சார்?
நான் வந்தா நல்லா இருக்குங்க.
சார் இல்ல சார் வந்து நான் ப்ராஜெக்ட் தான் சார் கே்கறேன். நீங்க தைரியமா எதாச்சு சொன்னா சொல்லலாம் சார்.
இல்ல தைரியமாதான சொல்லிட்டு இருக்கேன். நான் ஏங்க பயப்படணும்? நான் ஏன் பயப்படணும் சொல்லுங்க? என்னுடைய கருத்தை சொல்றதுக்கு நான் ஏங்க பயப்படணும்? ஏன் நான் எலக்சன்ல வேட்புமனு தாக்கல் பண்ணி முதலமைச்சர் ஆக கூடாதா?
இல்ல சார். ஆகலாம் சார். பட் இப்போதைக்கு நிலவரப்படி கேக்குறேன் சார்.
இப்போதைக்கு நிலவரப்படி யார் ஆகுவான்னு சொல்றீங்க?
இல்ல நான் உங்கள கேக்குறேன். அந்த மாதிரி யாரு முதலமைச்சரா வந்தா நல்லா இருக்கும்னு எதிர்பார்த்தீங்க அப்படின்னு கேக்குறேன்?
அதுதான் சொல்றேங்க. நான் வந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
சரி கரெக்ட்தான் சார். இது ப்ராஜெக்ட் சார்.
ப்ராஜெக்ட் தாங்க சொல்றேன். ஏங்க ப்ராஜெக்ட்ல சொல்லுங்க. நான் திடீர்னு நாளைக்கு கூட வேட்புமனு தாக்கல் பண்ணி 234 தொகுதியிலயும் ஆள நிப்பாட்டுவேன்.
இல்ல சார் புரியுது சார். பட் இது கொஞ்சம் ப்ராஜெக்ட் சார். நீங்க கொஞ்சம் இது பண்ணிங்கனாதான் சார் மார்க் கிடைக்கும்.
பரவால்ல உங்களுக்கு மார்க் கிடைக்கட்டும். சந்தோஷம் இல்லைன்னு சொல்லல. நான் என் கருத்தை என்னை சொல்ல விடுங்க.
சரி ஓகே ஓகே சார். பேர் சொல்ல முடியுமா?
என் பேர் நவீன் குமார்ங்க.
ஓகே இப்ப தமிழகத்துல இப்போதைக்கு ஒரு தேர்தல் வச்சா எந்த கட்சி ஜெயிக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
நான் எந்த கட்சிய சொல்றேனோ அந்த கட்சி ஜெயிக்குங்க.
அதுதான் சார் உதாரணமா ஏதாச்சு ஒரு கட்சி பேர் சொல்லுங்க சார்.
நா.கு. கட்சி சார்.
என்னங்க சார்? நா.கு.? ஃபுல்லா சொல்லுங்க சார்.
கட்சியோட பேரு, நவீன் குமார் வெற்றி கழகம்னு வச்சுக்கோங்க சார்.
சரி ஓகே சார் தேங்க்யூ சார் ஓகே சார் !
— ரூபன்ஜி
Comments are closed, but trackbacks and pingbacks are open.