சமையல் குறிப்பு – கேரள ஸ்பெஷல் தெளரி அப்பம்!
வணக்கம், சமையலறை தோழிகளே ! இன்னைக்கு நாம பார்க்கப் போற ரெசிபி என்னன்னா கேரளாவிலேயே ஸ்பெஷலா செய்யப்படுற தெளரி அப்பம் தாங்க. வழக்கமா செய்ற அப்பம செய்யாம ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க சுவை சூப்பரா இருக்கும். சரி வாங்க இது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு ஒரு கப், துருவிய வெல்லம் ஒன்றரை கப், துருவிய தேங்காய் ஒரு கப், வாழைப்பழம் 3, பொடித்த ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, பிரியாணி இலை தேவையான அளவு.
செய்முறை
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி ராகி மாவை சேர்த்து ஒரு மூன்று நிமிடம் கீழறி இறக்கவும். மீண்டும் அதே வாணலியில் துருவிய வெல்லத்தை சேர்த்து அதனுடன் சிறிது நீரை ஊற்றி கட்டி இல்லாமல் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் வாழைப்பழத்தை சிறியதாக கட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, அரைத்த வாழைப்பழ பேஸ்ட், வெல்லப்பாகு, உப்பு சேர்த்து பிசைந்து பிரியாணி இலையில் நீளவாக்கில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பிறகு, இறக்கி அதன் மேல் துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.