அங்குசம் சேனலில் இணைய

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களின் ஒரு சிறு பட்டியல்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் பல உண்டு. அவற்றில், ஒரு சில கோவில்களை பற்றியும் அதன் மேலோட்டம் பற்றியும் இங்கு பார்ப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயில் போன்றவை அடங்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று. இது மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோரை குடிக்கொண்டு உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இத்திருக்கோவிலில் அமைந்துள்ள செவ்வக வடிவில் இருக்கும் “பொற்றாமரைக் குளம்” வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்!

சோழர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் நாட்டின் மிகப்பெரிய சிவ லிங்கங்களில் ஒன்றாகும்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்

ஒரு மகத்தான நந்தி ஒரே கல்லில் இருந்து செதுக்கப்பட்டு இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது ஆகும்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்!

இந்த சிவ ஸ்தலம் கட்டிடக் கலைக்கும் ஆன்மீகத்திற்கும் பெயர் போனது என்று கருதப்படுகிறது. இது ராமாயண கதையுடன் தொடர்புடையது. இராவணனை வதம் செய்த பிறகு, பிரம்மஹத்தி தோஷத்தை போக்க ராமர் மணலில் லிங்கம் செய்து சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்
ராமநாதசுவாமி கோவில்

ஆகவே, இந்த லிங்கத்தின் பெயரில் இருந்தே “ராமநாதசுவாமி” என்ற பெயர் வந்தது. “ராம ஈஸ்வரம்” என்று அழைக்கப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்!

முருகனின் முக்கிய அறுபடை வீடுகளில் ஒன்று. இந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் புனிதம் இங்குள்ள முருகன் சிலை. போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
தண்டாயுதபாணி சுவாமி கோவில்

இங்கு, பஞ்சாமிர்தம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம் ஆகும். மேலும், இரவு பொழுதில் தங்கத் தேரில் முருகர் கோவிலை சுற்றி பவனி வருகிறார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்!

சிவ பெருமானுக்கான மிகப்பெரிய கோவில்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாகவும், பல அடியார்களின் பக்தி மற்றும் அருளாற்றலின் அடையாளமாகவும் விளங்குகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
அருணாச்சலேஸ்வரர் கோவில்

இக்கோவில் மலையை சுற்றி செய்யப்படும் கிரி வலத்திற்கான தலமாகவும் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் இடமாகவும் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்!

தில்லை நடராஜர் கோவில் நடனத்தின் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரிய கோவில் ஆகும். பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இந்தக் கோவில் சைவ இலக்கியங்களின் கோவில் என்ற பெயரிலேயே சிறப்பித்து கூறப்படுகிறது.

 நடராஜர் கோவில்
நடராஜர் கோவில்

மேலும், சிதம்பரம் ஊர் “தில்லை வனம்” என்ற பெயரிலும் அறியப்படுகிறது. ஏனெனில், அங்கு தில்லை மரங்கள் மிகுதியாக இருந்தன.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில்!

கும்பகோணத்தில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற சிவ தலங்களில் இதுவும் ஒன்று. இது சிவபெருமானுக்கு கட்டப்பட்ட பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில்
ஆதி கும்பேஸ்வரர் கோவில்

இக்கோவிலில் ஆயில்ய நட்சத்திரத்தை ஒட்டி அகத்திய முனிவருக்கு “குருபூஜை விழா” நடைபெறுவது இக்கோவிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயில்!

இந்த கோவில் அதன் தங்க கோபுரத்தால் மிகவும் பிரபலமானது. வேலூரில் லட்சுமி நாராயணிக்கான ஒரே ஒரு பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிரீபூரம் பொற்கோயில் ஆகும்.

வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயில்
ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயில்

இக்கோயில் ஸ்ரீ லட்சுமி நாராயணியை மூல சக்தியாக கொண்டு தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஒரு சிறிய பச்சை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வேலூர் தங்க கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.