விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு!
விவசாய நிலங்களை அழித்து சட்ட விரோதமாக சோலார் பேனல் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பூமலைக்குண்டு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கவுல் காடு 89 ஏக்கர் நிலத்தில் 55 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்து சோலார் பேனல் அமைக்கும்படி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு முறைகளாக போலி பத்திர பதிவு செய்து 55 ஏக்கரில் சோலார் பேனல் அமைக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வரும் சோலார் பேனல் நிறுவனத்திற்கு எதிராக இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் எங்களுடைய நிலம் எங்களுக்கே வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய் ஸ்ரீ ராம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.