சமையல் குறிப்பு: கிண்ணத்தப்பம்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம பாக்க போற ரெசிபி ட்ரடிஷனலாவும் உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த கிண்ணத்தப்பம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி 1 கப், சர்க்கரை 1 1/2 கப், ஏலக்காய் பொடி 1 ஸ்பூன், முட்டை 2, தேங்காய் பால் 1 கப், நெய் 1 ஸ்பூன்.
செய்முறை:-
பச்சரிசியை சுடு தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவைத்து அதனை கழுவி ஒரு கப் தேங்காய் பால் ஊற்றி நன்கு மைய அரைத்து கொள்ளவும். பிறகு, மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, முட்டை சேர்த்து அரைத்து ஏற்கனவே அரைத்த மாவில் சேர்த்து கலந்து வேறொரு பாத்திரத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் கலந்த மாவை இட்லி பாத்திரத்தில் 30 நிமிடம் வேக விடவும்.

சூடு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வீட்டில் இருப்பவருக்கு பரிமாறவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
-பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.