சமையல் குறிப்பு – வாழைப் பூ பக்கோடா!
வணக்கம் சமையலறை தோழிகளே! குட்டிஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஹெல்தியா சாப்பிடற மாதிரி இன்னைக்கு ஒரு ரெசிபி வாழைப்பூ பக்கோடா தாங்க செய்யப்போறோம். இதை எப்படி செய்யறதுன்னு வாங்க பார்ககலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப் பூ ஒரு கப், கடலை மாவு அரை கப், அரிசி மாவு ஒரு ஸ்பூன், சோள மாவு ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 2, பெருங்காயத்தூள் 2 சிட்டிகை, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, சமையல் சோடா ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் வாழைப்பூவை நடுவில் இருக்கும் நரம்பை எடுத்து சுத்தம் செய்து பொடியாக கட் செய்து வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும் அதன் பின் சமையல் சோடா உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பெருங்காயத்தூள், சோள மாவு அரிசி மாவு கடலை மாவு இவை அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியின் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை சிறிது சிறிதாக திரட்டி பொன்னிறமாகும் வரை விட்டு எடுக்கவும். இப்போது சூடான சுவையான வாழைப்பூ பக்கோடா தயார். இதன் மேல் சிறிது லெமன் ஜூஸை பிழிந்து பொரித்த கருவேப்பிலை தூவி பரிமாறலாம்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.