வாழைத்தண்டு சட்னி! சமையல் குறிப்பு – 38

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! சாதாரணமா நாம்ப தேங்காய் சட்னி, கல்லை சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி இப்படி எல்லாம் பார்த்திருப்போம். இப்போ புதுசா வாழைத் தண்டுல சட்னி எப்படி செய்வது என்று பார்க்க போறோம். சிம்பிள் ரெசிபி தாங்க வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இந்த வார அங்குசம் வார இதழில்…

வாழைத்தண்டு 1 கப், பொட்டுக்கடலை மாவு 1 ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 2, தேங்காய் துருவல் 4 ஸ்பூன், பெருங்காயம் ஒரு சிட்டிகை, கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனியே கலக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை மாவு கலவையை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து கடுகு கருவேப்பிலை தாளித்தால் சுவையான மணமான வாழைத்தண்டு சட்னி ரெடி!!

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.