ஆரம்பமாச்சு ஐப்பசி அடைமழை ! கரண்ட் விசயத்துல கவனமா இருங்க !
ஐப்பசி அடைமழை ஆரம்பமாகிவிட்டது. எந்த நேரம் எங்கு புதிய புயல் மையம் கொள்ளும்? எங்கே கரையை கடக்கும் என்று வானிலை அறிவிப்புகளை பார்த்த வண்ணம் இருக்க வேண்டிய சூழலை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் என்றில்லை, பொதுவில் மழை காலங்களில் பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழக மின்சார வாரியம் வெளியிட்டு வருகிறது.
இவற்றை கவனமுடன் பின்பற்றுவதோடு, நமக்கு தெரிந்த வகையில் நமது நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து நாமும் நம் சுற்றமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்தலாமே!
➤➤. ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
➤➤. வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
➤➤. வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது.
➤➤. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
➤➤. நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
➤➤. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.
➤➤. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
➤➤. மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
➤➤. சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
➤➤. தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்கவேண்டும்.
➤➤. மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
➤➤. மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ அல்லது மின்சார சேவை தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் தேவைகளுக்கும் பொது சேவை மையமான மின்னகத்தை 9498794987 பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
— அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.