செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத கோவில்!
நம் ஊர்களில் எல்லாம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் கோவிலின் அர்ச்சகர் நம் தலையில் பெருமாளின் கிரீடத்தை வைத்து ஆசீர்வாதம் செய்வார் ஆனால் இதற்கு எதிர்மறாக ஒரு சம்பவம் தெலுங்கானாவில் உள்ள கோவிலில் நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், ஜட் சர்லா அடுத்த கங்காபுரத்தில் லட்சுமி சென்ன கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவில் சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களின் தலையில் சாமியின் செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றனர். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி நடந்து வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சாமியின் செருப்பால் ஆசீர்வாதம் வாங்கும் பக்தர்களை பாதுகாப்பாகவும் நலமாகவும் இறைவன் வைத்திருப்பார் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.