கேர்ள் ஸ்டைல் பலாப்பழம் புட்டு! சமையல் குறிப்பு – 53
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு கேர்ள் ஸ்டைல் ரொம்ப மோஸ்ட் ஃபேமஸ் ஆன பலாப்பழம் புட்டு தான். வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1 கப் நறுக்கிய பலாப்பழம், 1 1/2 கப் தண்ணீர், 2 கப் வறுத்த அரிசி மாவு, சிறிது உப்பு.
செய்முறை:-
அரிசி மாவில் சிறிது உப்பு, நறுக்கிய பலாப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கொழுக்கட்டை பிடிக்கும் பதம் அளவு பிசைந்து உதிர்த்து கொள்ளவும்.மாவு உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

மாவை புட்டு குழாயில் வைத்து 7 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். வெந்ததும் சூடாக பரிமாறவும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.