குட்டீஸ்க்கு குயிக் ஸ்னாக்ஸ் ”முட்டை ஃப்ரை”- சமையல் குறிப்பு -54
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம குட்டீஸ்க்கு குயிக் ஸ்னாக்ஸ் ஈஸியா செய்யக்கூடிய வகையில் முட்டை ஃப்ரை தான். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், சிக்கன் மசாலா ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள், எண்ணெய் தேவையான அளவு, நான்கு முட்டை, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் நான்கு முட்டையை வேக வைக்க வேண்டும். வேக வைத்த பிறகு அதை இரண்டு துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் தேவைக்கான அளவு எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து முதலில் எண்ணெயில் போட்டு சற்று நேரம் வதக்க வேண்டும்.அதன் பிறகு வேக வைத்த முட்டையை அதில் சேர்க்க வேண்டும். முட்டையின் இரு பக்கமும் மசால் இறங்கியவுடன் அதை எடுத்து பரிமாறவும் சுவையான முட்டை வறுவல் ரெடி!!
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.