பதுக்கி வைத்து குட்கா, ஹான்ஸ் விற்பனை! விற்பனையாளர் கைது !
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள கவரப்பாளையத்தைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் (53/25) த/பெ கண்ணையன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலைப் பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ஆண்டிமடம் காவல்துறையினர் திருமங்கை ஆழ்வாரை கைது செய்து அவரிடமிருந்து 800கிராம் எடையுள்ள 100 பாக்கெட் ஹான்ஸ் மற்றும் 480கிராம் எடையுள்ள 240 பாக்கெட் பான்மசாலாவை பறிமுதல் செய்து, எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் பிற போதை வஸ்துகள் விற்பனை செய்வது குற்றமாகும். பள்ளிகள்/கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் சுற்றளவு தொலைவில் விற்பனை செய்வதும், பள்ளி மாணவர்களுக்கு இவற்றை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்படி அவர்களது கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும் சிறுவர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.