திமுக இல்லாம RSS,BJP எதிர்க்க முடியாதா | தோழர் மருதையன் நேர்காணல் ! பாகம்-2
திமுக இல்லாம RSS,BJP எதிர்க்க முடியாதா | தோழர் மருதையன் நேர்காணல் !
கேள்வி : ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யை எதிர்க்கிறவர்கள் எல்லாமே இடதுசாரிகள் அப்படினு எடுத்துக்கலாமா?
பதில் : இடதுசாரில அதனுடைய இடது எல்லையில் மாலெ குழுக்கள் இருக்கிறார்கள். அதனுடைய வலது எல்லையில் சோசியலிஸ்டுகள் இருக்கிறார்கள். இதற்கும் நடுவில் பலவிதமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். கருப்பு – வெள்ளையாக பார்த்துவிட முடியாது. இவர்களுக்கான பொதுக்கொள்கை சோசலிசத்தை ஆதரிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இவர்கள் மத்தியில் பிளவுகள் கூடியிருக்கிறது. ஆனால், சண்டை குறைந்திருக்கிறது. காரணம், முதன்மையான எதிரியின் அச்சுறுத்தல். அதனால்தான் தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் இருந்தவர்கள்கூட, இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்கிற இடத்துக்கு வந்திருக்கிறார்கள். இந்த சமரசத்துக்கான காரணம், பெயரளவுக்கான ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டிருந்ததைக்கூட ஏறக்கட்டக்கூடிய சூழ்நிலை வந்ததுதான்.
வேற விதமா சொல்றேனே. திராவிட இயக்கம், அம்பேத்கர் இயக்கம், இடதுசாரி இயக்கம் இந்த மூன்றுக்கும் இடையில இத்தனை காலமா பலவிதமான கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், விவாதங்கள், இருந்தது. இவர்களை புது எதிரி ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளியிருக்கிறார்கள். இது ஒரு நிர்ப்பந்தம்.

கேள்வி : சரி திமுக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபியை எதிர்க்க முடியாதா?
நான் இப்படி கேட்கிறேன். எதுக்காக திமுக இல்லாம எதிர்க்கணும்? ஒரு வலிமையான எதிரியை எதிர்கொள்றோம். இந்த இடத்துல அந்த அஞ்சு பேர மட்டும் கழட்டி விடுங்கனு சொல்றவங்க யாருடைய ஆளா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நான் திமுக-வை ஆதரிக்கிறேன். திமுகவுக்கு வாக்கு கேட்டிருக்கிறேன். இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன். அதேநேரம், சில விஷயங்களில், திமுகா-ன் தவறுகளை எதிர்த்து பேசி இருக்கிறேன். கடுமையா சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருக்கிறேன். நான் யாருக்கு கற்பை நிரூபிக்கணும்னு கேட்கிறேன்?
ஏற்கனவே மாநில அரசுக்கு இருந்த அதிகாரங்கள் எல்லாம் இப்போது மெல்ல, ஒன்றிய அரசிடம் சென்று கொண்டிருப்பது நடைமுறை உண்மை. இந்த மாதிரி சூழல்ல நீங்க ஏன் முதலாளித்துவத்தை எதிர்க்கல? அதானி அம்பானியை விரட்ட வேண்டியதுதானே? நீட்டை ஏன் ஒழிக்கவில்லை? என கேட்பது குதர்க்க வாதம் இல்லையா? இதுக்கு மேல இந்த அரசு என்ன செய்யணும்? புரட்சி பண்ணனுமா?
இத முட்டுன்னு சொல்லிடலாம். இப்ப வேற ஒரு கேள்வி இருக்குது. இப்போது திமுக- காங்கிரஸ் போன்ற கட்சிகளோடு இணைந்து பாதிசத்தை எதிர்ப்பது கூடாதுன்னா? வேற எப்படி எதிர்க்கிறது? கொஞ்சம் கண்ணை திறந்து பாக்கணும். இதற்கு முன்னால எப்பவாவது சிபிஎம் மாநாடு சிபிஐ மாநாடு இதுக்கெல்லாம் தமிழக முதல்வர் போய் வாழ்த்து தெரிவிச்சு பேசி பாத்துருக்கீங்களா? இதுக்கு முன்னால, ராகுல் காந்தி பேசுவது போல காங்கிரஸ்காரங்க எப்பாவது பேசி பாத்துருக்கீங்களா? இந்த நடவடிக்கை எல்லாம் காங்கிரஸ் கட்சியே மாறிடல. ஆனா மாறி ஆகணும் அப்படின்ற கட்டாயத்தின் பிரதிபலிப்புதான் ராகுல் காந்தி. நடைமுறையில என்ன பிரச்சினை எதிர்கொள்றோம்? என்ன செய்யணும்? அப்படிங்கறது பற்றிய நோக்கமோ செயல் திட்டமோ இல்லாதவர்கள் தான் தில்லை வேதாந்தம் பேசுவார்கள்.
நேர்காணல் : வே.தினகரன்
(தொடரும்)








Comments are closed, but trackbacks and pingbacks are open.